சரும நோய்க்கு கை வைத்தியம்

palaraiyum thaakkum nooykalil charuma nooyum onru. palarin aelanap paarvaikku nammai ullaakki mana ulaichchalai undaakkum nooykalil ithuvum onraakum. charuma nooykku aalaanavar perumpaalum mana ulaichchalukku ullaakiraar. charuma nooykalukku naveena maruththuvaththai vida paarampariya murai innum chirantha muraiyil kai koduththu uthavukirathu. pakka vilaivukal illaathathum kooda.   chaththukkal neekkappadda vellai maavu, vellai cheene, kaappi, thaeneer, kulirpaanankal, norukkuth theenekal thol churukkaththai … Continue reading "charuma nooykku kai vaiththiyam"
charuma nooykku kai vaiththiyam

பலரையும் தாக்கும் நோய்களில் சரும நோயும் ஒன்று. பலரின் ஏளனப் பார்வைக்கு நம்மை உள்ளாக்கி மன உளைச்சலை உண்டாக்கும் நோய்களில் இதுவும் ஒன்றாகும். சரும நோய்க்கு ஆளானவர் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். சரும நோய்களுக்கு நவீன மருத்துவத்தை விட பாரம்பரிய முறை இன்னும் சிறந்த முறையில் கை கொடுத்து உதவுகிறது. பக்க விளைவுகள் இல்லாததும் கூட.

 

சத்துக்கள் நீக்கப்பட்ட வெள்ளை மாவு, வெள்ளை சீனி, காப்பி, தேநீர், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள் தோல் சுருக்கத்தை ஏற்படுத்துவதோடு, சருமம் தொய்ந்துபோய் அதன் பொலிவையும் இழக்கக் காரணமாகின்றன.

 

இரத்தம் சுத்தமாக இல்லாவிட்டாலும் சரும நோய் தாக்கும். அதனால் கீரை, தானியங்கள் சேர்க்கப்பட்ட சரிவிகித உணவும் மிகவும் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.

 

வியர்வை நன்கு வெளியேற போதிய உடற்பயிற்சி செய்வதும் அவசியமாகும்.

 

அரிப்பு, படை, ஒவ்வாமை என்றும் இன்னும் பல விதமான சரும நோய்களுக்கு சிறிது கை வைத்தியத்தையும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

 

ழூ தவசி முருங்கை இலை ஒரு கைப்பிடி எடுத்து இடித்து சாறு எடுக்க வேண்டும். இந்த சாற்றக் குடித்தால் அரிப்பு, படை எல்லாம் குணமாகும். இந்தச் சாற்றைக் குடிக்கும் காலத்தி புளி இல்லாத பத்தியம் இருக்க வேண்டும்.

 

ழூஅறுகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மைய அரைக்க வேண்டும். அதை தோல் வியாதி இருக்கும் இடத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் குளித்து வந்தால் நல்ல குணம் தெரியும்.

 

ழூ குப்பைமேனி சொறி சிரங்குக்குக் கை கண்ட மருந்து. குப்பை மேனி இலை ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு, கல் உப்பு கொஞ்சம் சேர்த்து அரைத்து, அரிப்பு கண்ட இடத்தில் பூசி அர மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் ஊறல், படை எல்லாம் ஓடிப் பாய்விடும். குணம் தெரிந்தவுடன் மருந்தைக் கைவிட்டுவிடலாம். இதனைக் காலை நேரத்தில் பூசிக் குளித்தால் நல்லது.

 

ழூ வேப்பிலை ஒரு கைப்பிடி, 3 சிறிய வெங்காயம் இரண்டையும் அரைத்து உடம்பு முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தாலும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிக்குக் குணம் கிடைக்கும்.

 

ழூ 20 கிராம் நன்னாரி வேரை அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். இது 200 மிலி ஆகியதும் இறக்கிவிட வேண்டும். காலையில் 100 மிலி, சாயங்காலம் 100 மிலி குடித்து வந்தால் தோல் நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

Popular Post

Tips