முதலையுடன் போராடி : உயிர்பிழைத்த இளைஞன்  

chilaapam – maathampai nakaril ilaijar oruvar thanathu kaalil oru pakuthiyai kadiththu thinra muthalaiyai thaakki viddu uyir thappiyullaar. 24 vayathaana chaanakka mathushaan enra ilaijanae ivvaaru uyir thappiyullaar. kadantha 18 aam thikathi maalai chilaapam- kolumpu pirathaana veethiyin mahaveva pirathaechaththil irunthu thanathu veeddukku chenrukkondiruntha intha ilaijan tholaipaechi alaippukku pathilalikka thanathu moddaar chaikkilai maathampai lunu oayaa paalaththirku arukil neruththiyullaar. … Continue reading "muthalaiyudan poaraadi : uyirpilaiththa ilaijan  "
muthalaiyudan poaraadi : uyirpilaiththa ilaijan  

சிலாபம் – மாதம்பை நகரில் இளைஞர் ஒருவர் தனது காலில் ஒரு பகுதியை கடித்து தின்ற முதலையை தாக்கி விட்டு உயிர் தப்பியுள்ளார்.

24 வயதான சானக்க மதுஷான் என்ற இளைஞனே இவ்வாறு உயிர் தப்பியுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி மாலை சிலாபம்- கொழும்பு பிரதான வீதியின் மஹவெவ பிரதேசத்தில் இருந்து தனது வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த இந்த இளைஞன் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்க தனது மோட்டார் சைக்கிளை மாதம்பை லுனு ஓயா பாலத்திற்கு அருகில் நிறுத்தியுள்ளார்.

ஆற்றுக்கு அருகில் சுமார் இரண்டு அடி உயரமான மதில் ஒன்றில் அமர்ந்து அவர் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

அப்போது ஆற்றில் இருந்து பாய்ந்து வந்த முதலை இளைஞனின் காலை கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் செல்ல முயற்சித்துள்ளது.

சம்பவம் குறித்து விபரித்துள்ள இளைஞன்.

திடீரென சத்தம் வந்தது. நான் தண்ணீரை பார்த்தேன். அப்போது பெரிய முதலை என்னை நோக்கி பாய்ந்தது. ஓடுவதற்கு நேரம் இருக்கவில்லை.

முதலை எனது வலது காலை கவ்வி பிடித்துக்கொண்டது. தொடை பகுதி வரை முதலையில் வாயில் அகப்பட்டுக்கொண்டது.

எனது தொலைபேசி கரையில் விழுந்தது. முதலை என்னை மதிலில் இருந்து கிழே இழுத்துச் சென்றது. தண்ணீருக்குள் கொண்டு செல்லவிடாது மண்ணை இறுக்கி பிடித்துக்கொண்டேன்.

அதன் பிறகு சிறிய மரம் ஒன்றை பற்றி பிடித்துக்கொண்டு, மற்ற காலில் முதலையை தாக்கினேன். அப்போதும் அது விடவில்லை. முதலை என்னை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது.

எனக்கு நீச்சல் தெரியாது. எனது காலில் சதை கழன்றுக்கொண்டிருந்தது. எனது காலை விடும் வரை முதலை மற்றைய காலால் தாக்கினேன். இதனையடுத்து முதலை எனது காலை கைவிட்டது.

இதன் பின்னர் தப்பி கரை சேர்ந்தேன். லுனு ஓயா ஆற்றில் முதலைகள் இருப்பது எனக்கு தெரியாது என்றார்.

கரை சேர்ந்த பின்னர் கரையில் இருந்த தொலைபேசியில் சகோதரனை அழைத்துள்ளார்.

இளைஞன் நேற்று ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சானக்க, மாதம்பை சேனாநாயக்க தேசிய பாடசாலையில் கணித பிரிவில் கற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular Post

Tips