கமலஹசனின் திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன?

nadikar kamal haachan thanathu duviddar pakkaththin mukappu padaththai mundaachu kavijar paarathiyaar poal thannai chiththariththu pathivu cheythirukkiraar. nadikar kamalhaachan chila naadkalaaka thanathu duviddar pakkaththil thamilaka arachiyalaip parri theeviramaaka vimarchiththu varukiraar. arachiyal maddumillaamal, thaan kalanthuk kollum nekalchchikalai parriyum pakirnthu vanthaar. naerru nadikai theepikaa padukoanae nadiththirukkum ‘pathmaavathi’ padaththin pirachchanaikal kuriththum pathivu cheythirunthaar. innelaiyil, thanathu duviddar pakkaththil mukappu padaththai … Continue reading "kamalahachanen thideer maarraththukku kaaranam enna?"
kamalahachanen thideer maarraththukku kaaranam enna?
நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை முண்டாசு கவிஞர் பாரதியார் போல் தன்னை சித்தரித்து பதிவு செய்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் சில நாட்களாக தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசியலைப் பற்றி தீவிரமாக விமர்சித்து வருகிறார். அரசியல் மட்டுமில்லாமல், தான் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளை பற்றியும் பகிர்ந்து வந்தார். நேற்று நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கும் ‘பத்மாவதி’ படத்தின் பிரச்சனைகள் குறித்தும் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் முகப்பு படத்தை மாற்றி இருக்கிறார் கமல்ஹாசன். அந்த படத்தில் தன்னை பாரதியார் போல் சித்தரித்து இருக்கிறார். கமல் புதிதாக வைத்து இருக்கும் இந்த புகைப்படம் தற்போது டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.

அதில் அவர் தன்னை பாரதியாக சித்தரித்து இருக்கிறார். பாரதி போல முண்டாசு கட்டி முறுக்கு மீசையுடன் கமல் கோவமாக காட்சி அளிக்கிறார். இந்த புகைப்படம் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது. முகப்பு படம் மாற்றப்பட்ட சில நிமிடத்தில் டுவிட்டர் வாசிகளிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

Popular Post

Tips