குறட்டை விடுவதை தடுக்க  வேண்டுமா? இதைச் செய்தால் போதும்

kuraddai viduvathu enpathu iyarkaiyaana onruthaan, pakalil kadinamaana vaelai cheyvathaal, athanaal aerpadum udal valikal kaaranamaakavae iravil chila chamayankalil kuraddai varukinrana. aanaal, athae chamayam thinamum kuraddai varukirathu enraal athanaal pala aarokkiya koalaarukalum, pakal naerankalil choarvu marrum thaevaiyarra erichchalai aerpaduththum. ithai chaathaaranamaaka kandukollaamal viduvathu pinnaalil periya pirachnaikalukku valivakukkum enpathai maranthuvidaatheerkal. neenkal kuraddai viduvathaal unkaludan urankupavarkalin thookkaththirku athu idaiyooraaka … Continue reading "kuraddai viduvathai thadukka  vaendumaa? ithaich cheythaal poathum"
kuraddai viduvathai thadukka  vaendumaa? ithaich cheythaal poathum

குறட்டை விடுவது என்பது இயற்கையான ஒன்றுதான், பகலில் கடினமான வேலை செய்வதால், அதனால் ஏற்படும் உடல் வலிகள் காரணமாகவே இரவில் சில சமயங்களில் குறட்டை வருகின்றன. ஆனால், அதே சமயம் தினமும் குறட்டை வருகிறது என்றால் அதனால் பல ஆரோக்கிய கோளாறுகளும், பகல் நேரங்களில் சோர்வு மற்றும் தேவையற்ற எரிச்சலை ஏற்படுத்தும். இதை சாதாரணமாக கண்டுகொள்ளாமல் விடுவது பின்னாளில் பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

நீங்கள் குறட்டை விடுவதால் உங்களுடன் உறங்குபவர்களின் தூக்கத்திற்கு அது இடையூறாக இருப்பதுடன் உங்களையும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கும். இதற்காகப் பல மருத்துவர்களைச் சந்தித்தும் எந்தத் தீர்வும் இல்லை என்று வருந்துகிறீர்களா, கவலையை விடுங்கள். இந்த மூன்று விஷயத்தில் கவனம் செலுத்தினால் போதும், உங்கள் பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைத்துவிடும்.

  1. உடல் எடை:தேவையற்ற கொழுப்பு சேர்ந்து அதனால் உடல் எடை அதிகரிப்பது பல வகையில் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். உடல் பாதிப்புக்குள்ளாகிறது என்பதை எடுத்துக்காட்டுவதே அந்தக் குறட்டை சத்தம். உடல் எடை காரணமாக உங்கள் கழுத்து மற்றும் தொண்டை பகுதியில் அதிக சதை சேர்ந்து நீங்கள் மூச்சுவிடும் பொது குறட்டைச் சத்தத்தை உருவாக்குகிறது. சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவு பழக்கத்துடன், உடற்பயிற்சியின் மூலம் இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைத்தால் உங்களின் குறட்டை பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கலாம்.

மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம்:மது அருந்துவது, புகைபிடிப்பது மற்றும் லாராஜெபம் (அட்டீவன்), டயஸெபம் (வாலியம்) போன்ற மருந்துகளை உட்கொள்வதால் தசைகள் அதிகம் தளர்வடைந்து குறட்டைச் சத்தத்தை உண்டாக்குகின்றன. இந்தப் பழக்கத்தை கைவிட்டால் உங்கள் குறட்டையும் உங்களை விட்டுச் சென்றுவிடும்.

  1. படுக்கும் முறை:தட்டையான சம நிலப் பரப்பில் படுப்பதன் மூலம் உங்களின் தொண்டைச் சதையை தளர்த்தி, சுவாசிக்கும் போது காற்று செல்வதற்கான வழியைத் தடை செய்கிறது. இதுவே குறட்டை சத்தத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் படுக்கும் நிலையை மாற்றினால் குறட்டை வருவது நிற்கும்.

 

Popular Post

Tips