நாகதோஷம் வந்தால் என்ன தான் நடக்கும்

poathuvaaka raaku kaethu paampin vadivam enpathaal, ivarkalaal varum thosham naaka thosham enra peyarai chooddikkondathu. athodu ivarkal oanru elil allathu irandu eddil irunthaal, kadum paathippukkalai tharuvathaakavum, naankil, panerendil irunthaal paathiyalavu paathippai tharuvathaakavum jothidam cholkirathu. atharkaana vilakkam ithuthaan. thaamatha thirumanam, thaampaththiya thakaraaru, kanavan manaivi anneyoaneyam kuraivu, pirathaara chaerkkai allathu pirivu ivaiyanaththum naaka thaeshaththin oru paddiyal aakum. muthalil laknam … Continue reading "naakathosham vanthaal enna thaan nadakkum"
naakathosham vanthaal enna thaan nadakkum

பொதுவாக ராகு கேது பாம்பின் வடிவம் என்பதால், இவர்களால் வரும் தோஷம் நாக தோஷம் என்ற பெயரை சூட்டிக்கொண்டது.

அதோடு இவர்கள் ஓன்று எழில் அல்லது இரண்டு எட்டில் இருந்தால், கடும் பாதிப்புக்களை தருவதாகவும், நான்கில், பனிரெண்டில் இருந்தால் பாதியளவு பாதிப்பை தருவதாகவும் ஜோதிடம் சொல்கிறது. அதற்கான விளக்கம் இதுதான்.

தாமத திருமணம், தாம்பத்திய தகராறு, கணவன் மனைவி அன்னியோனியம் குறைவு, பிறதார சேர்க்கை அல்லது பிரிவு இவையனத்தும் நாக தேஷத்தின் ஒரு பட்டியல் ஆகும்.

முதலில் லக்னம் ஒரு ஜாதகரின் குணத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி. அங்கே பாம்பு கிரகங்கள் அமர்வதால் ஜாதகர் முரண்பட்டவராக காட்சி அளிப்பார்.

நம்பகத்தன்மை என்பது குறைவு, எழில் இவர்களில் ஒருவர் இருந்தால் மணமேடை பாக்கியத்திற்கு தடை உத்தரவு வந்து விடும்.

முறையற்ற உறவுகளில் முனைப்பும் ஆர்வமும் காட்டுவார்களாம். அது சுக்கிரன், செவ்வாய், சனி, சந்திரன் போன்ற ஏதாவது ஒரு கிரகங்களின் சேர்க்கை இருந்தால் கண்டிப்பாக மறுபக்கம் என்பது இருந்தே தீரும், இது பலன்.

பாம்பின் கால் பாம்பறியும். இருவரும் ஒரே குணம் கொண்டவராக இருக்கும் போது, தவறுகள் நடக்காது. பொண்ணுக்கு இருப்பின் மாங்கல்ய பலம் குறைவு.

குடும்ப வாழ்வில் குளறுபடி, ஆணுக்கு இருந்தால் நோய், கடன், எதிரி, கண்டம். இருவருக்கும் இருந்தால்?

எதுவும் எல்லை மீறி போகாது, ஆனாலும் பண பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும், குடும்ப சந்தோசம் கூடி குறையும்.

Popular Post

Tips