நக்மாவின் உண்மைக் கதைதான் ‘ஜூலி 2’

nakmaavin unmaik kathaithaan ‘juli 2’ padamaaka edukkappaddullathu enkiraarkal. raay ladchumi nadippil uruvaakiyirukkum henthip padam ‘juli 2’. raay ladchumikku henthiyil arimukamaakum inthap padaththai, theepak shevthaachane iyakkiyirukkiraar. chinemaavil nadikka oru nadikai ennavellaam cheykiraar enpathuthaan padaththin kathai. inthak kathai, oru nadikaiyin vaalkkaiyil nadantha unmaikkathai enkiraarkal. kaan nadikar oruvarin padaththin moolam chinemaavil arimukamaana intha nadikai, athanpiraku thamil marrum thelunkup … Continue reading "nakmaavin unmaik kathaithaan ‘juli 2’"
nakmaavin unmaik kathaithaan ‘juli 2’

நக்மாவின் உண்மைக் கதைதான் ‘ஜூலி 2’ படமாக எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியிருக்கும் ஹிந்திப் படம் ‘ஜூலி 2’. ராய் லட்சுமிக்கு ஹிந்தியில் அறிமுகமாகும் இந்தப் படத்தை, தீபக் ஷிவ்தாசனி இயக்கியிருக்கிறார். சினிமாவில் நடிக்க ஒரு நடிகை என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்தக் கதை, ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடந்த உண்மைக்கதை என்கிறார்கள்.

கான் நடிகர் ஒருவரின் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இந்த நடிகை, அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்தார். 90களில் முக்கிய நடிகையாக விளங்கிய இவருக்கும், திருமணமான தெலுங்கு நடிகர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதனால், தென்னிந்திய சினிமாவை விட்டு விலகிய இவர், போஜ்புரியில் நடிக்க ஆரம்பித்தார். அங்கும் ஒரு நடிகருடன் பழக்கம் ஏற்பட்டது. மிக முக்கியமான விஷயம், இவருடைய தங்கை தமிழ்நாட்டின் மருமகள் என்கிறார்கள்.

இவர்கள் சொல்வதைப் பார்த்தால், நக்மாவுக்குத்தான் அனைத்து விஷயங்களும் பொருந்திப் போகின்றன. அப்போ, நக்மாவின் உண்மைக் கதையாகத்தான் இந்தப் படம் இருக்க வேண்டும்.

 

Popular Post

Tips