உண்ட பின் வெந்நீர் அருந்துவது நல்லதா?

naam undu mudiththa piraku venneer (Warm water) ilajchoodu ulla neer  (Hot Water) enraal kothikka kothikka ulla neer) kudikkum palakkaththai uruvaakkik kolvathu nallathu! chaappidumpoathu idaiyil kudikkum thanneer ippadi ilajchoodu ulla neeraaka iruppathu nallathu. ithu maaradaippu varaamal thadukka uthavukirathaam! ennae viyappu! cheenarkalum, jappaaneyarkalum unavu unda pinpu choodaaka thaeneer arunthukiraarkal. aen arapu naadukalil kooda inthap palakkaththaik kadaippidikkiraarkal. undavudan … Continue reading "unda pin venneer arunthuvathu nallathaa?"
unda pin venneer arunthuvathu nallathaa?

நாம் உண்டு முடித்த பிறகு வெந்நீர் (Warm water) இளஞ்சூடு உள்ள நீர்  (Hot Water) என்றால் கொதிக்க கொதிக்க உள்ள நீர்) குடிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது நல்லது! சாப்பிடும்போது இடையில் குடிக்கும் தண்ணீர் இப்படி இளஞ்சூடு உள்ள நீராக இருப்பது நல்லது.

இது மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறதாம்! என்னே வியப்பு! சீனர்களும், ஜப்பானியர்களும் உணவு உண்ட பின்பு சூடாக தேநீர் அருந்துகிறார்கள். ஏன் அரபு நாடுகளில் கூட இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

உண்டவுடன் வெறும் குளிர்நீரைக் குடிப்பவர்கள் மாறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இக்கட்டுரை அமையக் கூடும்! வெந்நீர் – இளஞ்சூடு உள்ள நீர் செய்யும் நன்மையை – இந்தக் குளிர் நீர் செய்வதில்லையாம்!

குளிர் நீர் குடித்தவுடன், உண்ட உணவினை கெட்டியாக  (Solidity) ஆக்குகிறதாம். காரணம் நம் சாப்பாட்டில் எண்ணெய் – கொழுப்புகளும் உள்ளன அல்லவா? இது செரிமானத்தை காலதாமதப்படுத்துகிறது.  இந்த உணவுக் கூழ் அமிலத்துடன் இணைந்து செயலாற்றும்போது, அது உடைந்து கெட்டியான உணவை விட வேகமாக குடலினால்  உட்கிரகிக்கப்படுகிறது. இது குடலின் ஓரங்களில் திரண்டு, வெகுவிரையில் கொழுப்புகளாக மாறி புற்று நோய்க்கு வழி ஏற்படுத்தி விடும்.

உணவு உண்ட பிறகு சூடான சூப்போ அல்லது இளஞ்சூடு உள்ள வெந்நீரோ அருந்துவதே மிகவும் சிறந்தது.

Popular Post

Tips