பெண்களுக்கான வன் முறை பாரிய குற்றம் : ஷாருகான் தெரிவிப்பு

penkalukku ethiraana vanmurai mochamaana cheyal enru nadikar shaarukkaan kooriyullaar. penkal marrum chirumikalukku ethiraana vanmurai champavankal parriya vilippunarvu aerpaduththum vakaiyil, mumpaiyil oru nekalchchikku aerpaadu cheyyappaddirunthathu. ithil, nadikar shaarukkaan kalanthukondu paechinaar. avar kooriyathaavathu:- inraiya naadkalil mikavum mochamaana cheyal ennavenraal, penkalukku ethiraana vanmurai champavankal thaan. penkal vishayaththil unarvuppoorvamaakavum, mariyaathaiyudanum naankal iruppathaal, enkalai chilar kaeli cheykiraarkal. penkal aankalai vida … Continue reading "penkalukkaana van murai paariya kurram : shaarukaan therivippu"
penkalukkaana van murai paariya kurram : shaarukaan therivippu

பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல் என்று நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மும்பையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

இன்றைய நாட்களில் மிகவும் மோசமான செயல் என்னவென்றால், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தான். பெண்கள் விஷயத்தில் உணர்வுப்பூர்வமாகவும், மரியாதையுடனும் நாங்கள் இருப்பதால், எங்களை சிலர் கேலி செய்கிறார்கள்.

பெண்கள் ஆண்களை விட மேலானவர்கள் என்றும், அவர்களை பார்த்து நாங்கள் அஞ்சுகிறோம் என்றும் இங்கு கூடியிருக்கும் அனைவரும் கருதுகிறார்கள். பெண்களை பார்த்து குறிப்பாக எங்கள் மகள், சகோதரி, தாய், மனைவி மற்றும் தோழிகளை பார்த்து பயப்படுவதில் வெட்கப்பட ஏதுமில்லை என்று நான் கருதுகிறேன்.

இவ்வாறு ஷாருக்கான் பேசினார்.

Popular Post

Tips