கடற்கரைக்கு வந்த காதல் ஜோடிக்கு கத்திக்குத்து!

chennaiyai aduththa kaaddaankolaththooril ulla es.aar.em. enjineeyarin kallooriyil pi.daek padiththu varupavar thinaesh enra chavuthri (21).   ivar orichaa maanelaththai chaerntha apilaashaa enpavarai Kadhaliththu varukiraar. iruvarum naerru iravu 9 manekku merinaa kadarkaraikku chenranar.   iruvarum thaneyaaka amarnthu paechik kondirunthanar. appoathu 2 paer konda marma kumpal onru thinaesha kaththiyai kaaddi miraddi panam kaeddathu. avar kodukka maruththaar.   ithaiyaduththu … Continue reading "kadarkaraikku vantha Kadhal jodikku kaththikkuththu!"
kadarkaraikku vantha Kadhal jodikku kaththikkuththu!
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் படித்து வருபவர் தினேஷ் என்ற சவுத்ரி (21).

  இவர் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த அபிலாஷா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் நேற்று இரவு 9 மணிக்கு மெரினா கடற்கரைக்கு சென்றனர்.

  இருவரும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று தினேஷை கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டது. அவர் கொடுக்க மறுத்தார்.

  இதையடுத்து ரவுடிகள் இருவரும் அபிலாஷாவிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்தனர். அப்போது தினேஷ் தடுத்தார்.

 

இதில் ஆத்திரம் அடைந்த அக்கும்பல் அவரது வயிற்றில் கத்தியால் குத்தியது. இதில் அலறித்துடித்தபடி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

  உடனே அவரிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடியது. உயிருக்கு போராடிய தினேஷை, அபிலாஷா அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தார்.

  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

 

Popular Post

Tips