காதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக்கூடாது?

kaathil chaerum meluku poanra alukkai vaaram orumuraiyaavathu kuliththu mudiththu vanthavudan chuththam cheythuviduvom. chilar kaiyil eppoathum pads vaiththukkondae iruppar. aanaal, aaraaychchiyaalarkaloa thayavu cheythu kaathil undaakum antha meluku poanra alukkai neekka vaendaam enkinranar. paathukaappu antha meluku poanra padalam thaan kaathin aarokkiyaththai paathukaakkirathu ena koorukinranar. unmaiyil meluku poanru uruvaakum ithu alukku thaanaa? koluppu amilankalum, kolasdraalum namathu kaathil alukku … Continue reading "kaathil ulla alukkai aen chuththam cheyyakkoodaathu?"
kaathil ulla alukkai aen chuththam cheyyakkoodaathu?

காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கை வாரம் ஒருமுறையாவது குளித்து முடித்து வந்தவுடன் சுத்தம் செய்துவிடுவோம். சிலர் கையில் எப்போதும் பட்ஸ் வைத்துக்கொண்டே இருப்பர். ஆனால், ஆராய்ச்சியாளர்களோ தயவு செய்து காதில் உண்டாகும் அந்த மெழுகு போன்ற அழுக்கை நீக்க வேண்டாம் என்கின்றனர்.

பாதுகாப்பு

அந்த மெழுகு போன்ற படலம் தான் காதின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என கூறுகின்றனர்.

உண்மையில் மெழுகு போன்று உருவாகும் இது அழுக்கு தானா?

கொழுப்பு அமிலங்களும், கொலஸ்ட்ராலும் நமது காதில் அழுக்கு போன்று உண்டாகும் அந்த மெழுகு போன்ற பொருள் கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ராலால் உருவாகிறது. அந்தந்த உயிரினம், வயது, உணவுமுறை சார்ந்த காதில் உருவாகும் இந்த மெழுகு போன்ற பொருள் வேறுபடுகிறது. வேறு தாக்கம் பெறுகிறது.

காதிலும் இறந்த செல்கள், பாக்டீரியாக்கள் போன்றவை இருக்கும். மேலும் நாம் அதிக சப்தம் கொண்டு பாடல்கள் கேட்பது காதை வலுவாக பாதிக்கும். அதிக சப்தம் மற்றும் பாக்டீரியா போன்றவற்றிடம் இருந்து காதை காக்கும் தடுப்பானாக இந்த மெழுகு போன்ற பொருள் உதவுகிறது.

பட்ஸ் பயன்படுத்துவது தவறு

பட்ஸ் அல்லது குச்சி போன்றவற்றை பயன்படுத்தி காதினை சுத்தம் செய்ய முனைவதால், அந்த மெழுகு போன்ற பொருள் காதின் உட்புறத்தில் கெட்டியாக சேரவோ அல்லது படரவோ ஆரம்பித்துவிடும். எனவே பட்ஸ் பயன்படுத்துவதை நாம் நிறுத்த வேண்டும்.

ஆராய்ச்சி முடிவு

சில ஆராய்ச்சி முடிவுகளில், காதில் உருவாகும் இந்த மெழுகு போன்ற பொருளை எக்காரணம் கொன்றும் அகற்ற வேண்டாம் என்றும், இந்த மெழுகு போன்ற பொருள் அதிகரிக்கும் போது, காதின் வெளிப்புறங்களில் தோன்றும். அப்போது மட்டும் காதின் வெளிப்புறத்தை பஞ்சு, துணி, தண்ணீர் பயன்படுத்து துடைத்துக் கொள்ளுங்கள் என கூறப்பட்டுள்ளது.

தொப்புள், கண்களின் ஓரத்தில், இதர உடல் பாகங்களின் இடுக்கு பகுதிகளில் உண்டாவது போன்ற வியர்வை மற்றும் அழுக்கு கலந்த பொருள் அல்ல. இது காதினை பாதுகாக்கும் பொருளாக தான் நாம் காண வேண்டும். எனவே, இந்த வேறுபாட்டை முதலில் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

Popular Post

Tips