போலீஸ் மோப்பநாய்க்கு கூட தட்டுப்பாடா?

poalis moppa naaykalukku thadduppaaddu nelai aerpaddullathaakath therivikkappadukirathu. ilankai poalis thinaikkalaththin uththiyoakapoorva moppa naaykalil araivaachikkum maerpaddavai nooy marrum oayvu perruk kondulla kaaranaththinaal ivvaaraana oru nelaimai aerpaddullathu. poalis thinaikkalaththil chumaar 250 moppa naaykal irunthathaakath therivikkappadukirathu. enenum, tharpoathu 162 moppa naaykal maddumae kadamaikalil eedupadakkoodiya nelaiyil ullana. moppa naaykalukku aerpaddulla thadduppaaddai neekkum nookkil 45 poalis moppa naaykal netharlaanthilirunthu tharuvippatharku … Continue reading "poalees moppanaaykku kooda thadduppaadaa?"
poalees moppanaaykku kooda thadduppaadaa?

பொலிஸ் மோப்ப நாய்களுக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ மோப்ப நாய்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவை நோய் மற்றும் ஓய்வு பெற்றுக் கொண்டுள்ள காரணத்தினால் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 250 மோப்ப நாய்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தற்போது 162 மோப்ப நாய்கள் மட்டுமே கடமைகளில் ஈடுபடக்கூடிய நிலையில் உள்ளன.

மோப்ப நாய்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்கும் நோக்கில் 45 பொலிஸ் மோப்ப நாய்கள் நெதர்லாந்திலிருந்து தருவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தருவிக்கப்பட உள்ள மோப்ப நாய் ஒன்றுக்காக சுமார் பத்து லட்சம் ரூபா செலவிட நேரிடும் என பொலிஸ் திணைக்களம் கருத்து வெளியாகியுள்ளது.

 

Popular Post

Tips