சூரியனில் இருந்து காந்தப்புயல்

oru paariya puvi kaanthap puyalai thorruviththa chooriyanen cheerram vaanoli thodarpaadalai kulappiyullathu. inevarum naadkalil ithu minvalu valaiyamaippu, vaanoli thodarpaadal, cheymathi thodarpaadal aakiyavarraik kulappalaam ena naachaa ariviththullathu.   iruppinum intha cheerraththinaal ilankaiyin thodarpaadal valaiyamaippukkal paathikkappada maaddaathu ena ilankaiyilulla aarthar chi kilaark maiyaththin paechchaalar theriviththullaar.   intha cheerraththinaal skendinaeviya naadukalum thuruvap pakuthikalukku anmaiyil ulla naadukalum paathikkappadum enavum avar … Continue reading "chooriyanel irunthu kaanthappuyal"
chooriyanel irunthu kaanthappuyal
ஒரு பாரிய புவி காந்தப் புயலை தோற்றுவித்த சூரியனின் சீற்றம் வானொலி தொடர்பாடலை குழப்பியுள்ளது. இனிவரும் நாட்களில் இது மின்வலு வலையமைப்பு, வானொலி தொடர்பாடல், செய்மதி தொடர்பாடல் ஆகியவற்றைக் குழப்பலாம் என நாசா அறிவித்துள்ளது.

  இருப்பினும் இந்த சீற்றத்தினால் இலங்கையின் தொடர்பாடல் வலையமைப்புக்கள் பாதிக்கப்பட மாட்டாது என இலங்கையிலுள்ள ஆர்தர் சி கிளார்க் மையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

இந்த சீற்றத்தினால் ஸ்கென்டிநேவிய நாடுகளும் துருவப் பகுதிகளுக்கு அண்மையில் உள்ள நாடுகளும் பாதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

  இதேவேளை, வியாழன் கிரகம் அளவுள்ள சூரிய புள்ளியிலிருந்து புறப்படும் மின்னேற்றம் பெற்ற முதலுரு துணிக்கைகளாலான ஒரு வலுவான அலை தென் சீனாவின் வானொலி தொடர்பாடலை ஏற்கனவே குழப்பிவிட்டது. இது கடந்த செவ்வாய்க் கிழமை சர்வதேச நேரப்படி 01.56 மணிக்கு நடந்தது என நாசா மேலும் குறிப்பிட்டுள்ளது.

Popular Post

Tips