தேவையானவை
வாழைப்பூ – 4 மடல்கள்
உளுத்தம் பருப்பு -2தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயத்தூள் – அரைத்தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 2 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வாழைப்பூவைப் பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். (இது வாழைப்பூ கருப்பதைத் தவிர்க்கும்).
பருப்பு வகைகளை ஊறவைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றவும்.
மிகவும் மையாக அரைக்கத் தேவை இல்லை. கடைசியாக வாழைப்பூவைப் பிழிந்து எடுத்து,
இந்தக் கலவையுடன் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
இதை, சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளியோ, சிறிய அடையாகத் தட்டியோ வெயிலில் நன்கு உலர்த்திப் பத்திரப்படுத்தவும்.
இந்த வடகத்தை, எண்ணெயில் வறுத்துப் பயன்படுத்தலாம்.