இப்படியும் ஒரு அதிஷ்டம் யாருக்குத்தான் வரும்

cheenaavil thanathu pannaiyil kandaeduththa panriyin piththappai kal moolam vivachaayi oruvar koadeesvarar aana champavam appakuthiyil perum aachchariyaththai aerpaduththiyullathu. kodukkira theyvam kooraiyai piyththuk kondu kodukkum enpaarkal. athu poanra champavam cheenaavil nadanthullathu. cheenaavil 51 vayathu vivachaayi oruvar thanathu pannaiyil ulla vivachaaya nelaththai uluthaar. appoathu viththiyaachamaana kal poanra poarul kidaiththathu. adarththiyaana romankal neraintha antha kal 4 inch neelamum, 2.5 … Continue reading "ippadiyum oru athishdam yaarukkuththaan varum"
ippadiyum oru athishdam yaarukkuththaan varum

சீனாவில் தனது பண்ணையில் கண்டெடுத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆன சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். அது போன்ற சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

சீனாவில் 51 வயது விவசாயி ஒருவர் தனது பண்ணையில் உள்ள விவசாய நிலத்தை உழுதார். அப்போது வித்தியாசமான கல் போன்ற பொருள் கிடைத்தது. அடர்த்தியான ரோமங்கள் நிறைந்த அந்த கல் 4 இன்ச் நீளமும், 2.5 இன்ச் அகலமும் இருந்தது. அது பற்றிய விவரங்கள் தெரியாமல் தனது நண்பர்களிடம் கேட்டபோது அது பன்றியின் பித்தப்பையில் உருவாகிய ‘கல்’ என தெரியவந்தது.

‘கோரோசனை’ என்று அழைப்படும் அந்த பன்றியின் பித்தப்பை கல் பலவிதமான நோய்களையும் தீர்க்கும் ஒரு மருந்தாகும். விவசாயிடம் கிடைத்துள்ள இந்த பன்றி பித்தப்பை கல் ரூ.8 கோடியே 70 லட்சம் விலை போகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் திடீர் கோடீஸ்வரரான விவசாயி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

Popular Post

Tips