நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு பிரபு தேவாவின் காதல் படம்

thamil chinemaavil nadikaraaka ree-endri aakiyirukkum piraputhaevaa nadippil kadantha 2010-aam aandae thayaaraana Kadhal padamaana `kalavaadiya poaluthukal’ padam rileechukku thayaaraaki iruppathaaka koorappadukirathu.thamil chinemaavil manathil pathiyumpadiyaana karuththulla padankalai ethaarththamaaka iyakkum thankar pachchaan iyakkaththil aduththathaaka uruvaaki irukkum padam `kalavaadiya poaluthukal’. kadantha 2010-aam aandae intha padaththin padappidippu mudintha nelaiyil, thayaarippaalar pirachchanaiyaal padam veliyaakaamal irunthathu. innelaiyil, intha padaththin pirachchanaikal mudivukku vanthiruppathaaka … Continue reading "neenda kaala idaivelikkup piraku pirapu thaevaavin Kadhal padam"
neenda kaala idaivelikkup piraku pirapu thaevaavin Kadhal padam

தமிழ் சினிமாவில் நடிகராக ரீ-எண்ட்ரி ஆகியிருக்கும் பிரபுதேவா நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டே தயாரான காதல் படமான `களவாடிய பொழுதுகள்’ படம் ரிலீசுக்கு தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.தமிழ் சினிமாவில் மனதில் பதியும்படியான கருத்துள்ள படங்களை எதார்த்தமாக இயக்கும் தங்கர் பச்சான் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் `களவாடிய பொழுதுகள்’.

கடந்த 2010-ஆம் ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளர் பிரச்சனையால் படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் பிரச்சனைகள் முடிவுக்கு வந்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

காதல் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா – பூமிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

பரத்வாஜ் இசையமைத்திருக்கும் இந்த படம் இந்த மாதம் (டிசம்பர் 2017) வெளியாக இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை இயக்குநர் தங்கர் பச்சானே மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Post

Tips