தாய்ப்பாலுக்கான உணவுகள்

karppakkaalaththilum, kulanthai pirantha pirakum paereechcham palam chaappiddu vanthaal thaayppaal athikamaaka churakkumilam thaaymaarkal palarukku thaayppaal churappathil pirachchinai irukkirathu. atharku ooddachchaththu kuraipaaduthaan mukkiya kaaranam. paathaam, pisthaa, vaerkkadalai aakiyavarril ooddachchaththukkalum, kaalchiyamum, purathamum nerainthirukkinrana. avai paalooddum penkalin aarokkiyaththai valuppaduththa uthavum. avarkal paerichcham palaththai thinamum chaappiddu vara vaendum. athil athika alavu irumpu chaththu irukkirathu. athu raththaththin alavai cheeraaka paraamarikka uthavum. … Continue reading "thaayppaalukkaana unavukal"
thaayppaalukkaana unavukal
கர்ப்பக்காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்இளம் தாய்மார்கள் பலருக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சினை இருக்கிறது.
அதற்கு ஊட்டச்சத்து குறைபாடுதான் முக்கிய காரணம். பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றில் ஊட்டச்சத்துக்களும், கால்சியமும், புரதமும் நிறைந்திருக்கின்றன. அவை பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவும். அவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.
அதில் அதிக அளவு இரும்பு சத்து இருக்கிறது. அது ரத்தத்தின் அளவை சீராக பராமரிக்க உதவும். கர்ப்பக்காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். பூண்டுவையும் உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். அது தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும். பூண்டுவை அதிகம் சேர்த்து சூப்பாகவும் பருகி வரலாம்.
பாகற்காய் கசப்பத் தன்மை கொண்டிருந்தாலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நன்மை பயக்கும். வெந்தயத்தை பாலில் கலந்து குடித்து வருவதும் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும். கேரட்டை பச்சையாகவோ வேக வைத்தோ சாப்பிடலாம். அதுவும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். ஜூஸ் பருகுவதும் நல்லது.
முருங்கை கீரைக்கும், முருங்கை காய்க்கும் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும் சக்தி இருக்கிறது.
அவை நோய் எதிர்ப்பு ஆற்றலையும் மேம்படுத்தும். எல்லா கீரை வகைகளையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். முருங்கை இலையையும், பாசிபருப்பையும் சேர்த்து உணவாக்கி சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். காலையில் ஓட்ஸை காய்ச்சி பருகுவதும் நல்லது. அது தாய்ப்பாலை
அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். முட்டை சாப்பிட்டு வருவதும் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்க உதவும்.

Popular Post

Tips