இரத்தினக்கற்கள் நிரப்பப்பட்ட அதிசய பாத்திரம்! நந்திமித்ரவினால் புதைக்கப்பட்டது எங்கே?

thuddakaimunu arachanen paththu palam poarunthiya thalapathikalil oruvaraana nanthimirathravinaal maraiththu vaikkappadda puthaiyalai kumpal onru thaedi varukirathu. vilaimathipparra iraththina karkaludan koodiya puthaiyalai kandupidippatharkaaka pallama, poaththukulam pirathaechaththil kuluvoonru nadavadikkai maerkondullathu. pen oruvarum, maelum aaru naparkalinaal kadantha 3aam thikathi iravu poojaikalai nadaththi akalvu nadavadikkaikalai maerkondullanar. pallama pirathaechaththil nanthimithra chila kaalam thankiyirunthathaakavum, antha kaalappakuthiyil avaraal puthaikkappadda iraththina karkal nerappappadda paaththiram … Continue reading "iraththinakkarkal nerappappadda athichaya paaththiram! nanthimithravinaal puthaikkappaddathu enkae?"
iraththinakkarkal nerappappadda athichaya paaththiram! nanthimithravinaal puthaikkappaddathu enkae?

துட்டகைமுனு அரசனின் பத்து பலம் பொருந்திய தளபதிகளில் ஒருவரான நந்திமிரத்ரவினால் மறைத்து வைக்கப்பட்ட புதையலை கும்பல் ஒன்று தேடி வருகிறது.

விலைமதிப்பற்ற இரத்தின கற்களுடன் கூடிய புதையலை கண்டுபிடிப்பதற்காக பள்ளம, பொத்துகுளம் பிரதேசத்தில் குழுவொன்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பெண் ஒருவரும், மேலும் ஆறு நபர்களினால் கடந்த 3ஆம் திகதி இரவு பூஜைகளை நடத்தி அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பள்ளம பிரதேசத்தில் நந்திமித்ர சில காலம் தங்கியிருந்ததாகவும், அந்த காலப்பகுதியில் அவரால் புதைக்கப்பட்ட இரத்தின கற்கள் நிரப்பப்பட்ட பாத்திரம் மற்றும் தங்கத்திலான புத்தர் சிலை ஒன்றும் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

அத்துடக் நந்திமித்ரவினால் நிர்மாணிக்கப்பட்ட விகாரை ஒன்றும், புதையல் தோண்டப்பட்ட இடத்திற்கு சற்று அருகில் அமைந்துள்ளது.

புதையல் தோண்டப்பட்ட இடத்தின் உரிமையாளர் அடிக்கடி தனது கனவில் வந்து தனது காணியில் புதையல் உள்ளதாகவும், அதனை எடுக்குமாறும் கூறியதாகவும், அதற்கமைய பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு புதையல் தேட ஆரம்பித்ததாகவும் அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு புதையல் பெற்றுக் கொள்வதற்காக 35 அடி ஆழத்தில் தோண்டியுள்ள போதிலும், புதையலை பெற்றுக் கொள்ள முடியவில்லை. புதையல் தோண்டியவர்களில் ஒருவர் சிக்கி கொண்டமையினால் இந்த நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் பள்ளம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, புதையல் தோண்டிய ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Popular Post

Tips