இந்த நோயாளிகளுக்கு மட்டும் சுடுநீர் கண்டமப்பா?

thanneerai nanraaka kothikka vaiththaal athil ulla kirumikal anaiththum alinthu vidum. enavae kaalai marrum maalai enru iruvaelaiyum venneeril kulippathu mikavum nallathu. aanaal oruchila nooyaalikal maddum venneeril kulippathai thavirkka vaendum. entha nooyaalikal venneeril kulikka koodaathu? choriyaachis poanra charuma pirachchanai ullavarkalukku venneeril kuliththaal antha nooyin thanmai athikariththu arippu aerpadum. enavae choriyaachis marrum poaduku pirachchanai ullavarkal chuduneeril kulippathaith thavirppathu … Continue reading "intha nooyaalikalukku maddum chuduneer kandamappaa?"
intha nooyaalikalukku maddum chuduneer kandamappaa?

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்தால் அதில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து விடும். எனவே காலை மற்றும் மாலை என்று இருவேளையும் வெந்நீரில் குளிப்பது மிகவும் நல்லது.

ஆனால் ஒருசில நோயாளிகள் மட்டும் வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

எந்த நோயாளிகள் வெந்நீரில் குளிக்க கூடாது?
  • சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனை உள்ளவர்களுக்கு வெந்நீரில் குளித்தால் அந்த நோயின் தன்மை அதிகரித்து அரிப்பு ஏற்படும். எனவே சொரியாசிஸ் மற்றும் பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் சுடுநீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
  • சர்க்கரை நோய் முற்றிய நிலையில் உள்ளவர்கள் சருமத்தின் உணர்வுத்திறன் குறைவாக இருக்கும். எனவே இவர்கள் அதிக சூடான நீரில் குளிக்க கூடாது. இல்லையெனில் உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படும்.
  • நீரை அளவுக்கு அதிகமாக கொதிக்க வைத்து குளிக்கக் கூடாது. ஏனெனில் அதனால் சருமம் மற்றும் முடிகளில் உள்ள ஈரப்பதம் குறைந்து, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.
  • அதிகமான சூட்டில் குளிப்பதால் கால்களில் வெடிப்பு ஏற்படுவதுடன், உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை வர கூட வாய்ப்பு உள்ளது.
மிதமான வெந்நீரில் குளிப்பதன் நன்மைகள்
  • வெந்நீரில் குளிப்பதால் ரத்த நாளங்கள் விரிவடைந்து, உடலின் அனைத்து உறுப்புகளிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து புத்துணர்ச்சி கிடைக்கும்.
  • சளி காரணமாக மூக்கடைப்பு உள்ளவர்கள் சுவாசிப்பது கடினமாக இருக்கும். இது போன்ற நேரங்களில் வெந்நீரில் குளிப்பதால் மூக்கடைப்பு நீங்கி சுவாசம் சீராகும்.

Popular Post

Tips