பிரபுதேவாவின் `களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

thamil chinemaavil nadikaraaka ree-endri aakiyirukkum piraputhaevaa nadippil kadantha 2010-aam aandae thayaaraana `kalavaadiya poaluthukal’ padaththin rilees thaethi arivikkappaddullathu. thankar pachchaan iyakkaththil uruvaaki thaamathamaana padam `kalavaadiya poaluthukal’. Kadhal padamaaka uruvaaki irukkum intha padaththil piraputhaevaa – poomikaa munnane kathaapaaththiraththil nadiththullanar. chathyaraaj, pirakaashraaj, kajchaa karuppu mukkiya kathaapaaththiraththil nadiththirukkinranar. kadantha 2010-aam aandae intha padaththin padappidippu mudintha nelaiyil, thayaarippaalar pirachchanaiyaal padam … Continue reading "piraputhaevaavin `kalavaadiya poaluthukal’ padaththin rilees thaethi arivippu"
piraputhaevaavin `kalavaadiya poaluthukal’ padaththin rilees thaethi arivippu

தமிழ் சினிமாவில் நடிகராக ரீ-எண்ட்ரி ஆகியிருக்கும் பிரபுதேவா நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டே தயாரான `களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி தாமதமான படம் `களவாடிய பொழுதுகள்’.
காதல் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா – பூமிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
கடந்த 2010-ஆம் ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளர் பிரச்சனையால் படம் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், இந்த படத்தின் பிரச்சனைகள் முடிந்ததால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பரத்வாஜ் இசையமைத்திருக்கும் இந்த படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஜெய் – அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் பலூன் படமும் டிசம்பர் 29-ஆம் தேதி தான் ரிலீசாக இருக்கிறது.

Popular Post

Tips