4 வாரம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் நடக்கும்  தெரியுமா?

charkkaraiyai chaappidaamal neruththiya muthal vaaraththin aarampaththil adikkadi pachiyeduppathu, neraiya thanneer thaakam eduppathu, choarvu, thalaivali poanravai aerpadum. irandaavathu vaaraththin muthal naalil irunthu thalaivali marrum choarvu nelai murrilumaaka kurainthuvidum. moonraavathu vaaraththil irunthu eppoathum manthamaana nelaiyai aerpaduththum. athan pin chirithu chirithaaka churuchurupputh thanmai athikarikkum. naankaavathu vaaraththil charumaththin varadchi kurainthu palvaeru charuma paathippukal thadukkappaddu, charumam iyarkaiyaakavae poalivu undaakum. athodu … Continue reading "4 vaaram charkkarai chaappidaamal irunthaal nadakkum  theriyumaa?"
4 vaaram charkkarai chaappidaamal irunthaal nadakkum  theriyumaa?

சர்க்கரையை சாப்பிடாமல் நிறுத்திய முதல் வாரத்தின் ஆரம்பத்தில் அடிக்கடி பசியெடுப்பது, நிறைய தண்ணீர் தாகம் எடுப்பது, சோர்வு, தலைவலி போன்றவை ஏற்படும்.

இரண்டாவது வாரத்தின் முதல் நாளில் இருந்து தலைவலி மற்றும் சோர்வு நிலை முற்றிலுமாக குறைந்துவிடும்.
மூன்றாவது வாரத்தில் இருந்து எப்போதும் மந்தமான நிலையை ஏற்படுத்தும். அதன் பின் சிறிது சிறிதாக சுறுசுறுப்புத் தன்மை அதிகரிக்கும்.

நான்காவது வாரத்தில் சருமத்தின் வறட்சி குறைந்து பல்வேறு சரும பாதிப்புகள் தடுக்கப்பட்டு, சருமம் இயற்கையாகவே பொலிவு உண்டாகும். அதோடு கொழுப்பு மற்றும் உடல் எடையும் குறையும்.

சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்?

நம் உடம்பில் சர்க்கரை அதிகமாக இருந்தால் ரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங்களின் அளவை உயர்ந்து சர்க்கரை நோய் மற்றும் சிறுநீர் பிரச்சனை ஏற்படும்.

அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை இருந்தால், அது ரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றி கண் பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும்.

உயிரணுக்களால் ரத்த ஓட்டத்தில் இருக்கக் கூடிய குளுக்கோஸை, இன்சுலினின் உதவியின்றி உறிஞ்ச இயலாது. அதனால் அவற்றின் ஆற்றல் குறைந்து உடல் சோர்வு, அசதி உண்டாகும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால், நரம்பு மண்டலம் பாதிப்படைந்து, கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது, மரத்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும் பட்சத்தில், நம் உடலின் நோய் எதிர்ப்பு மையமானது, சீராக இயங்கும் ஆற்றலை இழந்து வெட்டுக் காயங்களை விரைவில் குணமடைய செய்யாது.

Popular Post

Tips