குதிரை மீது சவாரி போன காலம்போய் மாறாக இப்படித்தான் நடக்குது

manetharkal kuthiraikalil chavaari cheyvathu valamai, aanaal kuthirai onru manethan meethu chavaari cheytha champavam ukkirain naaddil idamperru ulaka chaathanaiyaaka pathivaakiyullathu. dimidro kaaladchi mikavum valimaiyaana manethar aavaar. avar oru periya kuthiraiyaith thookki tholil vaiththukkondu chila adikal varai nadanthu thanathu valimaiyai neroopiththullaar. ithanaal ivarin pukal ulakam muluvathum paravi viddathu. ithu maddumallaamal 36 vayathaana ivar thanathu valimaiyai neroopikka periya … Continue reading "kuthirai meethu chavaari poana kaalampoay maaraaka ippadiththaan nadakkuthu"
kuthirai meethu chavaari poana kaalampoay maaraaka ippadiththaan nadakkuthu

மனிதர்கள் குதிரைகளில் சவாரி செய்வது வழமை, ஆனால் குதிரை ஒன்று மனிதன் மீது சவாரி செய்த சம்பவம் உக்கிரைன் நாட்டில் இடம்பெற்று உலக சாதனையாக பதிவாகியுள்ளது.

டிமிட்ரோ காலட்சி மிகவும் வலிமையான மனிதர் ஆவார். அவர் ஒரு பெரிய குதிரையைத் தூக்கி தோளில் வைத்துக்கொண்டு சில அடிகள் வரை நடந்து தனது வலிமையை நிரூபித்துள்ளார்.

இதனால் இவரின் புகழ் உலகம் முழுவதும் பரவி விட்டது.

இது மட்டுமல்லாமல் 36 வயதான இவர் தனது வலிமையை நிரூபிக்க பெரிய இரும்புக் கம்பியை பற்களால் வளைக்கின்றார்,

ஆணிகளை சுத்தியலின் உதவியின்றி தன் கையாலேயே மரத்தில் அடித்திருக்கிறார், மிகப் பெரிய வாகனங்களை தன் மீது ஏற்ற வைத்திருக்கிறார், இரண்டு கால் பாதங்களால் ஒரு காரை தூக்கியிருக்கிறார், ஒரு சிற்றூர்தியை (van) இரு கைகளால் தூக்கியிருக்கிறார், நான்கு மனிதர்களை ஒரே கையால் தூக்கியிருக்கிறார்.

இவ்வாறு 63 கின்னஸ் சாதனைகளைச் செய்து முடித்துள்ளார் இந்த வலிமையான மனிதர். சமீபத்திலேயே இவர் குதிரையைத் தூக்கி சாதனை படைத்துள்ளார். அதாவது கால்கள் கட்டப்பட்ட குதிரையை தோளில் வைத்துக் கொண்டு நடந்திருக்கின்றார்.

நான்கு வயதில் கொதிக்கும் தேநீர் குவளை இவர் மீது விழுந்தது. இதனால் முப்பத்தைந்து வீதமான தோல் பாதிப்படைந்தது மட்டுமல்லாமல் ஏழு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டு தொடர்ச்சியாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆறு வயதில் தசைகள் இறுகியமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் இலக்கியத்திலும் ஆர்வமுள்ளவராக திகழ்ந்துள்ளார். விளையாட்டு வீரர்களைப் பற்றிய கட்டுரைகள் எழுதி அதற்காக இலக்கியத்துக்கான தங்கப் பேனா விருது பெற்றுள்ளார்.

அதன் பின்னரே தன் வலிமையை உலகறியச் செய்ய வேண்டுமென்று இவ்வாறான வலிமையை நிரூபிக்கும் சாதனைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

Popular Post

Tips