2018இல் எந்த ராசிக்காரர்களுக்கு கல்யாணம் நடக்கும்

kuruvin paarvai thunaiyai thaediththarum. malalaich chelvaththai makilchchiyoadu alliththaruvaar kurupakavaan. intha aandu chepdampar maatham kanneyil irunthu thulaam raachikku idampeyarntha kuru pakavaan varum 2018aam aandu akdopar varai antha raachiyil amarnthu palankalai alippaar. intha kuru peyarchchi kumpam, maesham, mithunam aakiya raachi kaararkalukku yoakam tharakkoodiyathu. kaaranam kurupakavaanen paarvai immurai intha moonru raachikalin meethu padukirathu. intha raachikkaararkal yoakak kaararkal. kuru … Continue reading "2018il entha raachikkaararkalukku kalyaanam nadakkum"
2018il entha raachikkaararkalukku kalyaanam nadakkum

குருவின் பார்வை துணையை தேடித்தரும். மழலைச் செல்வத்தை மகிழ்ச்சியோடு அள்ளித்தருவார் குருபகவான். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியில் இருந்து துலாம் ராசிக்கு இடம்பெயர்ந்த குரு பகவான் வரும் 2018ஆம் ஆண்டு அக்டோபர் வரை அந்த ராசியில் அமர்ந்து பலன்களை அளிப்பார்.

இந்த குரு பெயர்ச்சி கும்பம், மேஷம், மிதுனம் ஆகிய ராசி காரர்களுக்கு யோகம் தரக்கூடியது.

காரணம் குருபகவானின் பார்வை இம்முறை இந்த மூன்று ராசிகளின் மீது படுகிறது. இந்த ராசிக்காரர்கள் யோகக் காரர்கள். குரு பகவான் ராசிக்கு 2, 5, 7, 9,11ல் அமரும் போது நல்லது நடக்கும்.

காதல், கலப்புத் திருமணங்களுக்கு அவரவர் ஜாதக கிரக நிலைகளே முக்கிய காரணம். லக்னாதிபதி, சுக்கிரன், குரு, புதன், ஏழாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் சேர்க்கை, பார்வை, ஜாதகத்தில் அவர்களுக்கு இருக்கும் பலம் ஆகியவைதான் காதல் திருமணங்கள் நடைபெற காரணமாக அமைகின்றன.

ஏழரை சனியில் திருமணம் காதல் திருமணம் செய்வதற்கு அந்தகால கட்டத்தில் நடைபெறும் தசாபுக்திகள்தான் பெரிதும் காரணமாகின்றன. ஜாதகத்தில் 2, 5, 7, 8, 12 ஆகிய வீடுகளின் சம்பந்தப்பட்ட தசாபுக்தி, அந்தரங்களில் காதல் திருமணம் அரங்கேறுகிறது. மேலும், ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டம சனியின் காலத்திலும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்யும் அமைப்பு ஏற்படுகிறது. சந்திரன், புதன், ராகு கேது தசைகளில் திருமண பந்தம் கூடிவருகிறது.

மேசம் – காதல் மலரும் காலம்

மேஷ ராசிகாரர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் நல்ல காலம் பிறந்துள்ளது. 2018 அக்டோபர் 3 வரை பலன்கள் அருள்கிறார் குருபகவான்.

மேஷம் ராசியில் இருந்து 7ஆம் இடத்தில் துலாம் ராசியில் அமர்ந்துள்ளார். கணவன்மனைவி உறவு நல்லது நடக்கும்.

விட்டுக்கொடுப்பார்கள். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். பகை விலகும். நட்புகள் மலரும். 7ஆம் பார்வையாக ராசியை பார்ப்பதால் தோற்றப்பொலிவு அதிகரிக்கும். அஷ்டமத்து சனியின் ஆதிக்கம் கட்டுப்படும்.

ராசியை சம சப்தம பார்வையாக பார்ப்பதால் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். துணையுடன் ஒரு நல்ல உறவு நிலையில் வாழ்வீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நல்ல வரன் கிடைத்து திருமணம் முடியும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. மேலும் திருமணம் ஆகாதவர்கள் உங்களது வாழ்க்கை துணியை காண்பீர்கள்.

உங்களது பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு ஒப்புக்கொள்வார்கள். நீண்ட நாட்களாக குழந்தை பேரு பெற காத்திருந்து தம்பதியினருக்கு இந்த குரு பெயர்ச்சி எதிர் பார்த்த பலனை கொண்டு வரும். மேலும் தக்க மருத்துவ உதவி பெற்று நீங்கள் குழந்தை பாக்கியம் பெறவும் இந்த பெயர்ச்சி காலம் உங்களுக்கு உருதுணையாக உள்ளது.

ரிசபம் – கார்த்திகை கல்யாண காலம்

துலாம் ரிஷபத்திற்கு ஆறாம் இடம். இந்த இடத்தில் குரு பகவான் அமர்ந்துள்ளதால் கடன் வாங்கக் கூடாது.

உடல்நலத்தில் அக்கறை தேவை. வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். வியாழக்கிழமை மஞ்சள் நிற ஆடையை அணியலாம். உடல் நலத்தில் அக்கறை தேவை.

திருமணம் ஆகாதவர்கள் காதல் வயப்பட்டிருந்தால் அதை உங்களது பெற்றோர்களிடம் கூறி ஒப்புதல் பெறுவதற்கு இது கடினமான காலமாகும். திருமணம் ஆகாதவர்கள் சிறிது காலம் காத்திருப்பது நல்லது. வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். 2018 ஆம் ஆண்டு அக்டோபருக்கு மேல் துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார் குருபகவான். இது நன்மை நடைபெறும் காலமாகும்.

ஏனெனில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் அமர்ந்து 7வது பார்வையாக பார்க்கிறார் குருபவகான். உங்களது பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு ஒப்புக்கொள்வார்கள். அதனால் நீங்கள் எதிர் பார்த்த வாழ்க்கை அமைய இந்த பெயர்ச்சி காலம் ஒரு சாதகமானதாக உங்களுக்கு இருக்கும். அடுத்த கார்த்திகை கல்யாண காலமாக அமையும். அட்டம சனி காலமாக வேறு இருக்கிறது எனவே உங்கள் காதல் தேவதையை நினைத்து இப்போதே கனவு காணுங்கள்.

மிதுனம் – திருமணம் கைகூடும்

குரு பகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானம். ராசியை 9ஆம் பார்வையாக பார்க்கிறார். எண்ணங்கள் நிறைவேறும். மிதுனராசிக்காரர்கள் ஏற்றம் பெறுவார்கள்.

காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு சாதகமான காலமாகவே உள்ளது . நீங்கள் உங்களது எதிர் கால வாழ்க்கைத் துணையோடு சண்டை போட்டு பிறந்திருந்தால், அதை சரி செய்து சமாதானம் ஆவதற்கு இந்த காலம் சாதகமாகவே இருக்கும்.

காதல் வயப்படாதவர்கள் புதிதாக காதல் வயப்படுவீர்கள் பெற்றோர்களிடம் சம்மதம் பெற்று காதல் திருமணம் செய்வதற்கு இந்த குரு பெயர்ச்சி காலம் பொற்காலமாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் செய்யவதற்கு 2018 அக்டோபர் வரை ஏற்ற காலமாகும். கண்டச்சனி காலம் சனிப்பெயர்ச்சியும் சாதகமாகவே உள்ளது.

கடகம் – கல்யாணத்திற்கு ஏற்க காலம்

கடக ராசி காரர்களே குருபகவான் உங்களின் ராசிக்கு 4வது இடத்தில் அமர்ந்திருக்கிறார். குருவின் 7ஆம் பார்வை கர்ம ஸ்தானமான 10வது இடத்தின் மீது விழுவதால் நல்ல தொழில் அமையும். நல்ல வேலை அமையும். அங்கீகாரம் கிடைக்கும்.

காதல் உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தால் இந்த காலகட்டத்தில் சரியாகி விடும். ராகு உங்களது ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் புதிதாக காதல் ஏற்பட வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் திருமணத்திற்கு ஏற்ற வரனை பார்ப்பதற்கும் விரும்பியபடி திருமணம் செய்வதற்கும் இது ஏற்ற காலமாகும். பெற்றோரால் நிச்சயிக்க படும் திருமணம் தடை இன்றி நடக்கும். கடக ராசிக்காரங்க கல்யாண கனவு காணலாம்.

சிம்மம் – 2018 அக்டோபர்வரை சிங்கிள்தான்

குருபகவான் உங்கள் ராசிக்கு 3வது இடத்தில் அமர்ந்துள்ளார். தொடர்புகள் வெற்றி கிடைக்கும். குரு பகவான் உங்களுக்கு 7வது இடத்தை 5ஆம் பார்வையாக பார்க்கிறார். 9வது இடத்தை 7ஆம் பார்வையாக பார்க்கிறார்.

11வது இடத்தை 9ஆம் பார்வையாக பார்ப்பதால் வாழ்க்கை துணைக்கு மகிழ்ச்சி. நீங்கள் யாரிடமாவது காதல் வயப்பட்டிருந்தால், 2018 அக்டோபர் வரை கவனமாக இருக்க வேண்டும்.

உங்களது காதல் விருப்பத்தை கூறாமல் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் சிங்கிளாக இருப்பது நல்லது. வியாழக்கிழமை மவுன விரதம் இருப்பது அவசியம். 2018 அக்டோபருக்கு மேல் காதல், கல்யாணம் பற்றி யோசிக்கலாம்.

கன்னி – கல்யாண காலம்

ராசிக்கு 6வது இடம், களத்திர ஸ்தானத்திற்கு மறைவு. கணவன் மனைவி விட்டுக்கொடுக்க வேண்டும். குடும்ப ரகசியம் காக்க வேண்டும். ராசிக்கு 10வது இடம் தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். வெளிநாட்டு பயணம் ஏற்படும்.

இந்த குரு பெயர்ச்சி காலம் உங்களுக்கு சாதகமானதாக உள்ளது. ராகு மற்றும் குரு பகவானின் அருளால், திருமண பாக்கியம் பெற்று மன மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் கை கூடும் காலம் இது.

புதிதாக திருமணம் ஆனவர்கள் மகிழ்த்தியாகவும் அன்னியூனியமாகவும் இருப்பார்கள். உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். நீங்கள் யாரையாவது விரும்புகுறீர்கள் என்றால் உங்களது பெற்றோர்கள் உங்களது திருமணத்திற்கு ஒப்புதல் தருவார்கள். சமீபத்தில் திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பேரு பெறுவதற்கு இது ஏற்ற காலகட்டமாகும். நெடுங்காலமாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு 2018ல் மழலை செல்வம் மடியில் தவழும் காலமாகும்.

துலாம் – பொறுமை அவசியம்

குருபகவான் துலாம் ராசியில் அமர்ந்து 5, 7,9ஆம் இடத்தை பார்க்கிறார். மாற்றங்களும், ஏற்றங்களும் கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும். 7வது இடத்தை பார்ப்பதால் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

பஞ்சம ஸ்தானத்தை பார்ப்பதால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பஞ்சம ஸ்தானத்தை பார்ப்பதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வீட்டில் இந்த ஆண்டு குவா குவா சத்தம் கேட்கும். நீங்கள் யாரையாவது விரும்பினால், அவர்களிடத்தில் உங்களது விருப்பத்தை கூறுவதற்கு இது ஏற்ற காலமல்ல சற்று பொறுமை காக்கவும்.

ஏழரை சனி முடிவுக்கு வந்துள்ளது நல்ல விசயமே, ஆனால் அவரசத்தில் முடிவெடுத்தால் அது உங்களது கணவன் மனைவி உறவையே பாதித்துவிடும். 2018 அக்டோபர் வரை பொறுமை அவசியம்.

விருச்சகம் – தடைகள் விலகும்

குரு 12வது இடமான விரைய ஸ்தானத்திற்கு வந்துள்ளார். நல்ல வீடு வாங்கலாம். மேற்படிப்பு படிக்கலாம். 6வது இடத்தை பார்ப்பதால் எதிரிகள் விலகுவார்கள். 8வது இடத்தை பார்வை படுவதால் நன்மைகள் உண்டாகும்.

கணவரின் வருமானம் அதிகரிக்கும். காதலுக்கு இது ஏற்ற காலகட்டம் இல்லை. நீங்கள் உங்களது உத்யோகம் மற்றும் நிதி நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் விரும்புவரிடம் சண்டையில் ஈடுபட நேரிடலாம்.

மேலும் உங்களது விருப்பத்தை கூறுவதற்க்கோ அல்லது மற்றவர் விருப்பத்தை ஏற்பதற்க்கோ இது தக்க தருணம் இல்லை. திருமணம் ஆனவர்களுக்கு உங்களது கணவன்/மனைவிக்கு வெளி நாட்டில் வேலை கிடைக்கலாம். இது உங்கள் இருவரையும் தற்காலிகமாக பிரிக்க கூடும். இது உங்களது திருமண வாழ்க்கையை பாதிக்கலாம். 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குரு பெயர்ச்சி சற்று ஆறுதலை தரலாம். பட்டமங்கலம் அனுக்கிரக தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.

தனுசு – நன்மைகள் நடக்கும்

தனுசு ராசி காரர்களே 11 வது இடமான லாப ஸ்தானத்தில் குரு அமர்ந்துள்ளார். நல்ல வேலை அமையும், உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும். ஏழரை சனி நடந்தாலும் நன்மையே நடக்கும். 2017 காதலில் கசப்பான அனுபவங்களை கொடுத்திருக்கும். செப்டம்பரில் இருந்து நல்லகாலம் பிறந்துள்ளது. 2018 அக்டோபர் வரை அமர்களம்தான் குரு பகவான் உங்கள் ராசிக்கு 3வது இடம், 5வது இடம், 7வது இடத்தைப் பார்க்கிறார்.

7வது இடமான களத்திர ஸ்தானத்தை 9ஆம் பார்வையாக பார்ப்பதால் கணவன் மனைவி உறவு அதிகரிக்கும். திருமணம் நடைபெறாமல் இருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரன் கிடைக்கவும் திருமணம் நடக்கவும் ஏற்ற காலமாகும்.

மேலும் உங்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உங்களது காதல் விருப்பத்தை ஏற்று ஒப்புதல் தருவார்கள். தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு வியாழ நோக்கம் வந்து விட்டது.

பஞ்சம ஸ்தானத்தை பார்க்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும்.

மகரம் -10 மாதத்தில் கல்யாண காலம் கனியும்

குருபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் அமர்கிறார். இது உங்களுக்கு பெரிதாக அதிர்ஷ்டத்தை தராது. மேலும் ஏழரை சனி ஆரம்பிக்க உள்ளதாலும் ராகு சாதகமில்லாத இடத்தில சஞ்சரிப்பதாலும் வரும் 2018 சில வாக்குவாதம் தேவையற்ற பிரச்சனைகளில் நீங்கள் சிக்க நேரலாம்.

நீங்கள் விரும்புபவருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். எனினும் தற்போது நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால் குழந்தை பேருக்கு முயற்சிக்கலாம்.

நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் 2018 ஏழரை சனியின் தாக்கம் இருப்பதால் உங்களுக்கு ஏற்ற துணை கிடைப்பதில் சற்று தாமதம் அல்லது சிக்கல் ஏற்படலாம். 2018 அக்டோபர் வரை நீங்கள் திருமணத்திற்கு முயற்சிக்க வேண்டாம்.

கும்பம் – காதல் பொற்காலம்

அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குரு 9வது இடத்தில் வந்து அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். குரு பெயர்ச்சி மாபெரும் வரவாக அமைந்துள்ளது. 2017ல் 8ஆம் இட குரு உங்களது காதல் வாழ்க்கையில் பல இன்னல்களை ஏற்படுத்தி இருக்க கூடும்.

கடந்த செப்டம்பர் மாதத்திற்கு மேல் சோர்வு நீங்கி தோற்றத்தில் பொலிவு ஏற்பட்டுள்ளது. நஷ்டங்கள் நீங்கி லாபம் அதிகரிக்கும். குரு பகவான் 5ஆம் பார்வையாக உங்களின் ராசியை பார்க்கிறார். ராசிக்கு 3வது இடத்தை பார்க்கிறார். 5வது இடத்தை பார்க்கிறார்.

திருமணம் ஆகாதவர்கள் இந்த குரு பெயர்ச்சியால் காதலில் விழ வாய்ப்புள்ளது. நீங்கள் விரும்பியவரிடம் உங்களது காதலை கூற இது ஏற்ற காலமாகும். உங்களது பெற்றோர்கள் உங்களது காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள்.

உங்களுக்கு இது ஒரு பொற்காலமாகும். பூர்வபுண்ணிய ஸ்தானத்தை 9ஆம் பார்வையாக பார்ப்பதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். குரு அருளால் முருகப்பெருமானே வந்து பிறக்கப் போகிறார். நோய்நொடிகள் அற்ற வாழ்க்கையும், தாய், தந்தையரின் உறவு மேம்படும். உலகம் பாராட்டும் வகையில் வெற்றி கிடைக்கும் யோக காலமாகும்.

மீனம் – கவனம் தேவை

மீன ராசிக்காரர்களே இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் இருந்த குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். நீங்கள் யாரையேனும் விரும்புகுறீர்கள் என்றால், மிக கவனமாக இருக்க வேண்டும்.

அவரிடத்தில் உங்களது விருப்பத்தை கூற இது ஏற்ற காலம் இல்லை. சனிபகவானும் 10ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார்.

அடுத்த குரு பெயர்ச்சி வரை அதாவது 2018 அக்டோபர் வரை காத்திருப்பது நல்லது. திருமணம் ஆனவர்கள் குழந்தை பேரு பெற விரும்பினால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி செயல் படுவது நல்லது. திருமணம் அங்கத்தவராக இருந்தால் அடுத்த ஒரு வருடத்திற்கு காத்திருப்பது உத்தமம். வியாழக்கிழமைகளில் மஞ்சள் வண்ண ஆடை அணியுங்கள். தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.

Popular Post

Tips