அஜீத் – விஜய் கூட்டணி இணையுமா..

ajeth – vijay idaiyaeyaana nadpu irukkamaaki irukkirathu. entha alavukku irukkam enraal, iruvarum inainthu oru padaththil nadikkalaam enru mudivu edukkum alavukku! `mankaaththaa’ pada paplichiddi chamayam, inthath thakavalaith therivikkalaam enru rakachiyam kaakkiraarkalaam!   iruvaraiyum inaiththu iyakkuvathu..? venkad pirapu! ivar aerkenavae uruvaakki vaiththiruntha dapul hero chapjaekd onrai ajeth- vijay iruvaridamum cholli irukkiraar. avarkalukku rompavae pidiththuviddathu.   `enakku antha … Continue reading "ajeth – vijay kooddane inaiyumaa.."
ajeth – vijay kooddane inaiyumaa..
அஜீத் - விஜய் இடையேயான நட்பு இறுக்கமாகி இருக்கிறது. எந்த அளவுக்கு இறுக்கம் என்றால், இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கலாம் என்று முடிவு எடுக்கும் அளவுக்கு! `மங்காத்தா' பட பப்ளிசிட்டி சமயம், இந்தத் தகவலைத் தெரிவிக்கலாம் என்று ரகசியம் காக்கிறார்களாம்!

  இருவரையும் இணைத்து இயக்குவது..? வெங்கட் பிரபு! இவர் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்த டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை அஜீத்- விஜய் இருவரிடமும் சொல்லி இருக்கிறார். அவர்களுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது.

 

`எனக்கு அந்த கேரக்டர்!' `எனக்கு இந்த கேரக்டர்!' என்று மல்லுக்கட்டத் துவங்கியிருக்கிறார்கள். அரண்டு போன வெங்கட், `அதுக்குள்ள ஏன் அவசரம்? இன்னும் நான் ஸ்க்ரீன்ப்ளே சரி பண்ணிக்கிறேன்!' என்று கூறியிருக்கிறாராம்.

  அமிதாப், தர்மேந்திரா சேர்ந்து நடிச்ச `ஷோலே' இந்திய சினிமாவில் மைல்கல். அது மாதிரி ஒரு படத்தில் நடிக்க ஆசை. பவர்ஃபுல் ஆக்ஷன் சேருங்க, கலர்ஃபுல் காதல் சேருங்க, சியர்ஃபுல் காமெடி சேருங்க!' என்று வெங்கட் பிரபுவின் தோள் தட்டி அனுப்பி இருக்கிறார்கள் இருவரும்

 

Popular Post

Tips