M வடிவ ரேகை இருந்தால் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா?

jothidaththil en jothidam, kai jothidam, peyar jothidam, naadi jothidam, kuri cholthal enru palavakaikal undu. ithil anaivaridaththilum pirapalamaanathu kai jothidam. kai jothidaththil kaiyil ulla raekaiyaip paaraththu jothidam cholvaarkal. Kadhal vaalkkaiyai parri unkal kairaekai enna cholkirathu enru paarkkalaamaa? ithil kaiyil M vadivaththil raekai irunthaal avarkal vaalkkaich chirappaaka irukkum enak koorappadukirathu. unkal kaiyil M raekai irunthaal, unkalukku nalla … Continue reading "M vadiva raekai irunthaal Kadhal vaalkkai eppadi irukkum enru theriyumaa?"
M vadiva raekai irunthaal Kadhal vaalkkai eppadi irukkum enru theriyumaa?

ஜோதிடத்தில் எண் ஜோதிடம், கை ஜோதிடம், பெயர் ஜோதிடம், நாடி ஜோதிடம், குறி சொல்தல் என்று பலவகைகள் உண்டு.

இதில் அனைவரிடத்திலும் பிரபலமானது கை ஜோதிடம். கை ஜோதிடத்தில் கையில் உள்ள ரேகையைப் பாரத்து ஜோதிடம் சொல்வார்கள்.

காதல் வாழ்க்கையை பற்றி உங்கள் கைரேகை என்ன சொல்கிறது என்று பார்க்கலாமா?

இதில் கையில் M வடிவத்தில் ரேகை இருந்தால் அவர்கள் வாழ்க்கைச் சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. உங்கள் கையில் M ரேகை இருந்தால், உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், தலைமைப் பண்பில் சிறந்து விளங்குவீர்கள்.

அதிலும் வலது கையில் M ரேகை இருந்தால் அவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள், இடது கையில் M ரேகை இருந்தால் அவர்கள் தாய், காதல் மற்றும் தாரம் என குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும்.

“M” வடிவிலான ரேகை இந்த “M” வடிவிலான ரேகையானது, மூளை, இதயம், விதி மற்றும் வாழ்க்கை போன்ற ரேகைகளின் கலவை ஆகும். இவை மொத்தமும் சேர்ந்து “M” போன்ற வடிவில் உள்ளங்கையில் சிலருக்கு அமைந்திருப்பதை காண முடியும். வலது கை இதுபோன்று “M” வடிவிலான ரேகை வலது கையில் அமைந்திருந்தால், அவர்களுக்கு செல்வம், பொருள் விஷயங்கள் மற்றும் தர்க்கமானவை (Logic)கிடைக்கப்பெறும்.

இடது கை இதுபோன்று “M” வடிவிலான ரேகை இடது கையில் அமைந்திருந்தால், அவர்களுக்கு தாய், தாரம் மற்றும் உணர்வு ரீதியானவற்றில் நிறைய சிறப்புகள் அமையும். தலைமை வகிப்பது உள்ளங்கையில் M வடிவிலான ரேகை அமைந்திருந்தால் அவர்கள் இயற்கையாகவே தலைமை வகிக்கும் குணாதிசயம் பெற்றிருப்பார்கள் என்று பண்டையக் காலத்து பாரம்பரியத்தில் கூறப்பட்டுள்ளது.

வலிமையான உள்ளுணர்வு “M” வடிவிலான ரேகை உள்ளவர்களுக்கு வலிமையான உள்ளுணர்வு இருக்குமாம். இவர்களால் வஞ்சகம் செய்வது போன்றவற்றை முன்னரே கண்டறிய முடியும் என்றும், பெண்கள் மத்தியில் இது அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நல்ல வாய்ப்புகள் இயற்கையாகவே தலைமை வகிக்கும் தன்மை உள்ள இவர்களுக்கு, வசதி வாய்ப்புகள், நல்ல எதிர்காலம் மற்றும் சிறந்த வாய்ப்புகளும் அமையப் பெறுவார்கள்.

நல்லுணர்வு உள்ளங்கையில் “M” வடிவிலான ரேகை அமைந்திருப்பதும், நல்லுணர்வுக்கும் இணைப்பு உள்ளது என்றும் கூட சிலர் கூறுகிறார்கள். கை ரேகை குறித்த சிறு வரலாறு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு பண்டையக் காலத்தில் இந்துக்கள் ஜோதிட முறையில் கடைபிடிக்கப்பட்டு வந்தது என்று பெரும்பாலும் கூறப்பட்டாலும் இந்த கை ரேகை முறை முதலில் பயிற்சியில் இருந்தது சீனாவில் என்று சீன புத்தகமான “i ching”-ல் கூறப்பட்டுள்ளது என சில வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன.

அரிஸ்டாட்டிலிடம் இருந்து அலெக்சாண்டர் வரை ஆசிய கண்டத்தில் பிறந்திருந்தாலும் இந்த கை ரேகை பயிற்சி பண்டையக் காலத்திலேயே ஐரோப்பிய கண்டம் வரை பரவியிருந்தது. இதை பற்றி அரிஸ்டாட்டில் படித்து அதை அலெக்சாண்டருக்கும் கற்பித்தார் எனவும், அதன் படி தனது இராணுவ அதிகாரிகளின் குணாதிசயங்கள் குறித்து மதிப்பீடு செய்ய, அறிய இதை அவர் பயன்படுத்தியதாகவும் கூட சில வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இது எந்தளவு உண்மை என தெளிவாக தெரியவில்லை.

Popular Post

Tips