2018ஆம் ஆண்டு உங்களிற்கு எப்படி இருக்கும்? 2018 ஆண்டிற்கான இராசிபலன்கள்

2017 iruthikaddaththirku vanthu viddathu. puthiya 2018 emmai varavaerkak kaaththirukkinrathu. antha vakaiyil ethirvarum varudam anaivarukkum ineya varudamaaka amaiya vaendum. ethirkaalam eppadi amaiyappoakinrathu, aduththavarudam enna maarrankal nekalalaam enra aarvankal tharpoathu athikariththuviddana. athan adippadaiyil jothida reethiyaaka 2018aam aandu thaththam iraachikalukku palan eppadi amaiyappoakinrathu. poathuvaaka 2018 anaiththu iraachikalukkumae nanmaiyaiththaan vilaivikka irukkinrathu avvakaiyil 12 iraachikalukkumaana 2018 varudaththin muluppalaapalankalaiyum orae paarvaiyil … Continue reading "2018aam aandu unkalirku eppadi irukkum? 2018 aandirkaana iraachipalankal"
2018aam aandu unkalirku eppadi irukkum? 2018 aandirkaana iraachipalankal

2017 இறுதிகட்டத்திற்கு வந்து விட்டது. புதிய 2018 எம்மை வரவேற்கக் காத்திருக்கின்றது. அந்த வகையில் எதிர்வரும் வருடம் அனைவருக்கும் இனிய வருடமாக அமைய வேண்டும்.

எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது, அடுத்தவருடம் என்ன மாற்றங்கள் நிகழலாம் என்ற ஆர்வங்கள் தற்போது அதிகரித்துவிட்டன. அதன் அடிப்படையில் ஜோதிட ரீதியாக 2018ஆம் ஆண்டு தத்தம் இராசிகளுக்கு பலன் எப்படி அமையப்போகின்றது.

பொதுவாக 2018 அனைத்து இராசிகளுக்குமே நன்மையைத்தான் விளைவிக்க இருக்கின்றது அவ்வகையில் 12 இராசிகளுக்குமான 2018 வருடத்தின் முழுப்பலாபலன்களையும் ஒரே பார்வையில் பார்க்கலாம்.

மேஷம்
இந்த இராசிக்காரர்களுக்கு கிட்டத்தட்ட அனைத்து பலன்களும் நல்லதாகவே இருக்கும். அனைத்து கவனமும் செய்யும் வேலையில் முன்னேறுவதில் இருப்பார்கள். இவர்கள் அடுத்த வருடத்தை உற்சாகத்துடன் தொடங்குவதுடன், பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். ஆனால் இவர்கள் தனது வாழ்க்கை துணையுடன் நெருக்கம் இருந்தாலும், வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் குறைவாக இருக்கும். தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனக்குறைவு பெரிய பிரச்னையாகலாம்.

ரிஷபம்
ரிஷபம் இராசிக்காரர்கள் அடுத்த வருடம் முழுவதும் அஷ்டம சனியின் பிடியில் இருப்பார்க் ஆனாலும் அச்சம் தேவையில்லை, இவர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க கூடும். ஆனால் இவர்கள் எந்தவித பிரச்னைகளையும் துணிவுடன் சந்திப்பார்கள். வீண் அலைச்சல் மற்றும் வேண்டாத பிரச்னைகள் இருக்கும். இவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக விளைவுகளும், வியாபாரிகள் பணம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் தந்தையுடன் மனஸ்தாபம் ஆகியவை வரலாம்.

மிதுனம்
மிதுனம் இராசிக்காரர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் அதை சரிசெய்யும் அறிவு மற்றும் நேர்மறை சிந்தனையால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். ஆனால் இவர்களின் வாய் வார்த்தைகளினால் அவர்களின் குடும்பத்தினருடன் சில விடயங்களுக்கு சண்டை சச்சரவுகள் வரலாம். இந்த ராசிக்காரர்களில் சிலர் தங்களுக்கு பிடித்தவர்களுடன் மண வாழ்க்கையில் இணைவார்கள். முதலில் மண-வாழ்க்கை பிரமாதமாக இருந்தாலும், வருட இறுதியில் சிறு வேறுபாடுகள் ஏற்படலாம்.

கடகம்
இந்த இராசிக்காரர்கள் அடுத்த ஆண்டு நிறைய சவால்களும் சில புதிய திருப்பங்களும் ஏற்படும். ஆனால் இவர்களின் மனம் ஒரு நிலை இல்லாமல் தவிக்கும். ஆனால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும். சிறிய பிரச்னையானாலும் உடனே அதற்கு தீர்வு காண்பது மிகவும் அவசியம்.

சிம்மம்
சிம்ம இராசிக்காரர்களுக்கு அடுத்த ஆண்டு புனித யாத்திரையை மேற்கொள்ளலாம். கூட பிறந்தோர் மற்றும் நண்பர்களின் உதவி, ஆதரவு இவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும். காதல் தொடர்பான விடயத்தில் சில இன்பமான அனுபவங்களுடன், சில சிக்கல்களும் வரலாம். அதனால் ஜாக்கிரதையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. ஆனால் இவர்கள் வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக இருப்பார்கள். இவர்கள் செய்யும் வேலையில் கடுமையாக போட்டி இருந்தாலும், வீடு, மனை வாங்கும் யோகம் வருடத்தின் இறுதியில் அமையும்.

கன்னி
கன்னி இராசிக்காரர்களுக்கு அவ்வப்பொழுது வரும் அற்பமான பிரச்னைகளை தவிர்த்து இந்த வருடம் பிரமாதமாக இருக்கும். அடுத்த வருடம் இவர்கள் தன லாபத்தை பெருவார்கள். இவர்களின் புத்தி கூர்மையும், வாக்கு சாதுர்யமும் பல்வேறு வெற்றிகளை தேடித்தரும். இவர்களின் வாழ்க்கையில் புதிய நண்பர்கள் மற்றும் புதிய தொடர்புகள் உண்டாகும். புது வீடு, மனை வாங்கும் முயற்சியில் முழுமையாக இறங்குவார்கள். ஆனால் படிப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விடயங்களில், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

துலாம்
துலாம் இராசிக்காரர்களுக்கு சில விடயங்கள் வெற்றி அளிக்கவில்லை எனினும் ஒட்டுமொத்தமாக இந்த வருடம் முன்னேற்றத்தை குறிக்கும். ஆனால் இவர்களுடன் ஒரு ஆக்ரோஷமும் கலந்து இருக்கும். அதனால் இவர்களின் குடும்பத்தில் வீண் பிரச்னைகள் உருவெடுக்கும். ஆனால் இவர்கள் படைப்பாற்றல், உத்வேகம் மூலம் பல விதமான சவால்களை கையாள்வார்கள். குழந்தைகள் தங்கள் படிப்பிலோ, வேலையிலோ பிரமாதமாக பிரகாசிப்பார்கள்.

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் அடுத்த ஆண்டு கெடு பலன்கள் அதிகம் உள்ளது. பண தட்டுப்பாடு, வீண் விரையம், தன நாசம் போன்ற பிரச்னைகள் அடிக்கடி தலைதூக்கும். இவர்கள் எதிர்பார்த்தபடி வாழ்க்கை நிகழ்வுகள் நடக்காதலால் ஏமாற்றம் கலந்த கோபம், எந்த விடயத்திலும் நிதானமின்மை உண்டாகும்.

தனுசு
தனுசு இராசிக்காரர்களின் வாழ்க்கையில் மேன்மேலும் வளருவதற்கு நிறைய வாய்ப்புகள் வரும். பண வரவு இருந்து கொண்டே இருக்கும். கடினமாக உழைக்கவும் செய்வார்கள். இவர்களின் அணுகுமுறை மற்றும் பேசும் தோரணையினால் குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் பிரச்னைகள் உருவாகலாம். இது வருட முடிவில் இவர்களுக்கு ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். அவ்வப்போது வரும் இடையூறுகளை கவனித்து கொண்டால் குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும்.

மகரம்
மகரம் இராசிக்காரர்களுக்கு அடுத்த வருடம் முழுவதும் வாழ்க்கை சம்பந்த பல விதமான அனுபவங்களை எதிர்பார்ப்பார்கள். இவர்களுக்கு உடல் ஆரோக்கியக் குறைவும், பண தட்டுப்பாடும் எதிர்பாராத விதமாய் தொல்லை கொடுக்கலாம். வெளிநாடு மூலம் பல விதத்தில் ஆதாயம் கிடைக்க உள்ளது. வேலை செய்யும் இடத்தில் இவர்களின் அதிகாரம் ஓங்கும், ஆனால் அது சர்சையிலோ, விவாதத்திலோ கொண்டு போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

கும்பம்
கும்பம் இராசிக்காரர்களுக்கு அடுத்த வருடம் அனைத்து விதத்திலும் சிறந்ததாக இருக்கும். இவர்கள் பணம் சம்பாதிப்பதிலும், சேகரிப்பதிலும் முழு கவனம் செலுத்துவார்கள். இவர்கள் ஆன்மீகம் உட்பட, அனைத்து விடயத்திலும் ஆர்வம் காட்டுவார்கள். மேல் அதிகாரிகள் இடமிருந்து பாராட்டும் புகழும் பெறுவார்கள். இவர்கள் எதிர்ப்புகள் மற்றும் தடைகளை எதிர்த்து சகல சுகத்தையும் பெற்று ஆடம்பரமாக வாழ்வார்கள்.

மீனம்
மீனம் இராசிக்காரர்களுக்கு அடுத்த வருடம் சோதனைகளும், சாதனைகளும் கலந்து வரும். அதனால் இவர்கள் வருடம் முழுவதும் உடல் நலனிலும், ஆரோகியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். இவர்களின் அந்தரங்க வாழ்க்கை குலையலாம். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகள் கடுமையான உழைப்பை எதிர்பார்க்கலாம். ஆனால் வருட இறுதியில் இவர்களின் வாழ்க்கையில் சிறப்பான திருப்பங்கள் வரும். பண வரவு சீராக இருக்கும்.

கடவுள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் எத்தகைய நிலையையும் தாண்டி வெற்றி கொள்ளலாம். அனைவருக்கும் சிறப்பான வருடமாக, வெற்றிகள் குவியும் வருடமாக 2018 அமையட்டும்.

Popular Post

Tips