யோனி பொருத்தம் என்றால் என்ன? முழுவிபரம்

yoanep poaruththam [ vilakkam ] – thampathikalin anyoanya nadpu – makilchchiyaana chirrinpa uravu eddalai,paththalai pirachchinai varakkoodaathu enraal intha poaruththam avachiyam.thaampaththiyam cheks thirupthiyai parri chollakkoodiya mukkiyamaana poaruththam… ovvooru nadchaththiraththirkum aadu,kuthirai,chinkam ena yoane pirikkappaddirukkum…atharku pakaiyaana yoaneyum chollappaddirukkum..pakai yoane nadchaththirankalai chaerkka koodaathu…… paampu ena rokinekku kodukkappaddirukkum..eli ena pooraththukku kodukkappaddirukkum..paampu, eliyai kandaal vidumaa vilunkividum..rokinekku pooram .adankiththaan poaka mudiyum…naay ,poonai ena chollappaddirukkum nadchaththirankalai chaerththaal … Continue reading "yoane poaruththam enraal enna? muluviparam"
yoane poaruththam enraal enna? muluviparam

யோனிப் பொருத்தம் [ விளக்கம் ] – தம்பதிகளின் அன்யோன்ய நட்பு – மகிழ்ச்சியான சிற்றின்ப உறவு

எட்டலை,பத்தலை பிரச்சினை வரக்கூடாது என்றால் இந்த பொருத்தம் அவசியம்.தாம்பத்தியம் செக்ஸ் திருப்தியை பற்றி சொல்லக்கூடிய முக்கியமான பொருத்தம்…

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஆடு,குதிரை,சிங்கம் என யோனி பிரிக்கப்பட்டிருக்கும்…அதற்கு பகையான யோனியும் சொல்லப்பட்டிருக்கும்..பகை யோனி நட்சத்திரங்களை சேர்க்க கூடாது……

பாம்பு என ரொகிணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும்..எலி என பூரத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும்..பாம்பு, எலியை கண்டால் விடுமா விழுங்கிவிடும்..ரோகிணிக்கு பூரம் .அடங்கித்தான் போக முடியும்…நாய் ,பூனை என சொல்லப்பட்டிருக்கும் நட்சத்திரங்களை சேர்த்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்குமா.இதெல்லாம் கவனிக்க வெண்டும் அதுதான் யோனி பொருத்தம்.

10 வகை திருமணப் பொருத்தத்தில் சில பொருத்தங்களை சில சாதிகளுக்கு கட்டாயம் என்கின்றார்கள்.

சரி யோனிப் பொருத்தம் என்றால் என்ன? யோனி என்றால் பெண்குறி.

ஜோதிடர்கள் 27 நட்சத்திரங்களையும் சில மிருகங்களாகப் பிரித்திருக்கின்றார்கள்

கணவன் மனைவி சேர்க்கை சரியான பொசிசன்ஸ் அமைந்து திகட்டாத இன்பம் அளிக்க இந்த பொருத்தம் அவசியம். இந்த பொருத்தம் இல்லையென்றால் தாம்பத்தியம் இனிக்காது என்பதில் சந்தேகம் இல்லை.

ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும்.

இருவருக்கும் ஒரு யோனியாயினும், பகையில்லாத யோனிகளாகில் ஆண் யோனி ஆணுக்கும் பெண் யோனி பெண்ணுக்குமாயினும், இருவருக்கும் பெண் யோனியாயினும் உத்தமம். இருவருக்கும் பகையில்லாத ஆண் யோனியாயின் மத்திமம். ஆணுக்கு பெண் யோனியும் பெண்ணுக்கு ஆண் யோனியுமாயினும் ஒன்றிற் கொன்று பகையோனி யாயினும் பொருந்தாது.

நட்சத்திரங்களும் யோனி வகைகளும்!

அஸ்வினி – தேவ ஆண் குதிரை

பரணி – மானுஷ ஆண் யானை

கிருத்திகை – ராஷஸ பெண் ஆடு

ரோகிணி – மானுஷ ஆண் நாகம்

மிருகசீரிஷம் – தேவம் பெண் சாரை

திருவாதிரை – மானுஷ ஆண் நாய்

பனர்பூசம் – தேவம் பெண் பூனை

பூசம் – தேவம் ஆண் ஆடு

ஆயில்யம் – ராஷஸ ஆண் பூனை

மகம் – ராஷஸ ஆண் எலி

பூரம் – மானுஷ பெண் எலி

உத்திரம் – மானுஷ பெண் எருது

அஸ்தம் – தேவம் பெண் எருமை

விசாகம் – ராஷஸ ஆண் புலி

அனுஷம் – தேவம் பெண் மான்

கேட்டை – ராஷஸ ஆண் மான்

மூலம் – ராஷஸ பெண் நாய்

பூராடம் – மானுஷ ஆண் குரங்கு

உத்திராடம் – மானுஷ பெண் மலட்டு பசு

திருவோணம் – தேவம் பெண் குரங்கு

அவிட்டம் – ராஷஸ பெண் சிங்கம்

சதயம் – ராஷஸ பெண் குதிரை

பூரட்டாதி – மானுஷ ஆண் சிங்கம்

உத்திரட்டாதி – மானுஷ பெண் பசு

ரேவதி – தேவம் பெண் யானை

எந்த நட்சத்திரத்திற்கு என்ன மிருகம் என்று பார்த்தோம்.இதில் பகை மிருகங்கள் எவை..?

எருமைக்கு பகை–பசு,மான்,நாய்,

பசு-மான்-நாய்க்கு பகை–புலி

யானைக்கு பகை–புலி,சிங்கம்,

குதிரைக்கு பகை–எருது.

நாய்க்கு பகை–மான்,புலி.

குரங்குக்கு பகை–நாய்,ஆடு, பாம்பு

பூனைக்கு பகை–நாய்,புலி,

எலிக்கு பகை–பூனை,பாம்பு,

பாம்புக்கு பகை–கீரி.ஆடு.

உங்கள் நட்சத்திரத்திற்கு என்ன மிருகம்,உங்களின் மனைவி அல்லது காதலி நட்சத்திரத்திற்கு என்ன மிருகம் இவை இரண்டும் நட்பா பகையா என்பதை கவனிக்க மறவாதீர்கள்.

அப்படி பகையென்றால் உங்களின் தாம்பத்திய சுகம் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும்.ஆணும்-பெண்ணும் ஒற்றுமையுடன் சுகபலம் பெற இந்த பொருத்தம் முக்கியமாகும்.இதெல்லாம் பார்க்கத்தான் வேண்டுமா..? கண்டிப்பாக..இல்லா விட்டால் சண்டை படுக்கையறையில்தான் துவங்கும்.பாலும் கசந்ததடி பஞ்சனையும் சுட்டதடி என்றாகிவிடும்.

ஒரு பெண் எதிர்பார்க்கும் உடலுறவு சுகத்தை ஒரு ஆண் தர தவறினாலோ அல்லது ஒரு ஆண் கற்பனையோடு காத்திருந்து ஏமாற நேர்ந்தால் வெவ்வேறு காரணங்களை கூறி பிரிந்து விடுகிறார்கள்.நீண்ட நாள் வெளி நாட்டில் தங்கி வேலை செய்பவர்கள்,சில சமயங்களில் இந்த பிரச்சினை காரணமாக மனைவியோடு சேரமுடியாமைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

சிலர் எந்த நேரமும் சண்டைபோட்டுக்கொண்டே இருப்பார்கள்,வீட்டு வேலை,வெளி வேலை முடித்து சந்தோஷமாக பேசி சல்லாப விளையாட்டில் ஈடுபட்டு உடலுறவு ஏற்படும் நேரத்தில் ஒருவருக்கொருவர் முகத்தை திருப்பிக்கொண்டால் என்னவாகும்..?

கடுப்பும்,எரிச்சலும்,தலைதூக்கும்.தம்பதிகள் பலர் விவாகரத்து கேட்டு கோர்ட்டு வாசலை மிதிப்பதற்கும் யோனி பொருத்தம் காரணமாகிறது. இந்த ஜோதிட குறிப்பு உங்கள் கவனத்திற்கு பலமாக பாலமாக இருக்கட்டுமென்றே எழுதியுள்ளேன். திருமணம் ஆனவர்கள் உங்களை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள்.மணமாகாதவர்கள் எச்சரிக்கையுடன் பொருத்தம் பாருங்கள்.

Popular Post

Tips