அஜித் ஒரு பின்லேடன்!

thalaippai paarththathum payanthuvidaatheerkal. mankaaththaavil pinlaedan enrathum al – kuvaithaa payankaravaathi ochaamaa pinlaedan thaan padaththil nadikkiraar enru.     mankaaththaa padaththil oru paadalil vaadaa… pinlaedaa… enra vaarththaiyai poaddu oru paadalai uruvaakki irukkinranar mankaaththaa deem. thayaanethi alakiri thayaarippil, ajith – thrishaa nadippil, dairakdar venkad pirapu iyakkaththil vaekamaaka uruvaaki varum padam mankaaththaa.     ajiththin 50vathu padamaana ippadam … Continue reading "ajith oru pinlaedan!"
ajith oru pinlaedan!
தலைப்பை பார்த்ததும் பயந்துவிடாதீர்கள். மங்காத்தாவில் பின்லேடன் என்றதும் அல் - குவைதா பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் தான் படத்தில் நடிக்கிறார் என்று.

 

  மங்காத்தா படத்தில் ஒரு பாடலில் வாடா... பின்லேடா... என்ற வார்த்தையை போட்டு ஒரு பாடலை உருவாக்கி இருக்கின்றனர் மங்காத்தா டீம். தயாநிதி அழகிரி தயாரிப்பில், அஜித் - த்ரிஷா நடிப்பில், டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் படம் மங்காத்தா.

 

  அஜித்தின் 50வது படமான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை முடித்துவிட்ட டைரக்டர் வெங்கட் பிரபு, தற்போது பாடல் காட்சிகளை எடுத்து வருகிறார்.

 

 

இப்படத்தில் பாடல் ஒன்றில் வா..டா. பின்லேடா... என்பது போன்று ஒரு பாடலை கம்போசிங் செய்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

 

  இப்பாடலை பின்னணி பாடகர்கள் கிரிஷ் மற்றும் சுசித்ரா ஆகியோர் பாட, அதற்கு அஜித்தும் - த்ரிஷாவும் சேர்ந்து ரொமான்ஸ் செய்வது போன்று காட்சியை உருவாக்கியுள்ளார் வெங்கட்பிரபு.

 

  நிச்சயமாக படத்தின் ஹைலைட்டாக இந்த பாடல் இருக்கும் என்று கூறுகிறார்கள். மேலும் படத்தின் பெரும்பகுதி முடிந்துவிட்டதால், மே 1ம் திகதி அஜித் பிறந்தநாளன்று படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது

 

 

Popular Post

Tips