கொ‌ண்டை‌க் கடலை‌ குழ‌ம்பு

thaevaiyaanap poarudkal..   ko‌ndai‌k kadalai‌ – 250g venkaayam – 100g thakkaali – 2 poondu – 10 pal pachchai milakaay – 5 thaenkaay – arai moodi puli – nellikkaay alavu milakaayth thool – 1 spoon mallith thool – 2 spoon ma‌jcha‌l thoo‌l – 1/2 spoon enney – thaevaiyaana alavu kaduku, ulunthu, cheerakam, milaku, chaeாmpu – thaalikka … Continue reading "ko‌ndai‌k kadalai‌ kula‌mpu"
ko‌ndai‌k kadalai‌ kula‌mpu

தேவையானப் பொருட்கள்..

 

கொ‌ண்டை‌க் கடலை‌ – 250g
வெங்காயம் – 100g
தக்காளி – 2
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 5
தேங்காய் – அரை மூடி
புளி – நெல்லிக்காய் அளவு
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மல்லித் தூள் – 2 ஸ்பூன்
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு – தாளிக்க
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லி இலை

 

செய்முறை


கொண்டைக் கடலையை இரவே ஊறவைத்து விடவும்.

 

பாத்திரத்தை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்றிக் கா‌‌ய்‌ந்தது‌ம் கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

 

அத்துடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போ‌ட்டு நன்கு வதக்கியதும். ‌த‌க்கா‌ளியை‌ப் சேர்த்து நன்கு வதக்கவும்.

 

த‌க்கா‌ளி வத‌ங்‌கியது‌ம் ம‌ஞ்ச‌ள் தூ‌ள், ‌‌மிளகா‌ய் தூ‌ள், மல்லித் தூள்,ஆ‌கியவ‌ற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

 

அத்துடன் ஊ‌றிய கடலையை போட்டு நன்கு கிளறிய பின்பு தண்ணீரில் புளியை கரைத்து அதில் ஊற்றவும்.

 

ஒரு கொதி வந்ததும் அரைத்த தேங்காயை அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி அவிந்து வந்ததும் மல்லி இலை தூவி இறக்கி விடவும்.

 

சுவையான கொ‌ண்டை‌க் கடலை‌க் குழ‌ம்பு தயார். கொ‌ண்டை‌க் கடலை‌க் குழ‌ம்பு ‌தி‌க்காக இரு‌க்கு‌ம். சாதம், சப்பாத்தி, இ‌ட்‌லி, தோசை‌க்கு ‌மிகவும் சுவையாக இரு‌க்கு‌ம்.

இதில் உருளைக்கிழங்கு சேர்த்தால் சுவை இன்னும் அதிகரிக்கும்.

Popular Post

Tips