வெண்குஷ்டத்தை போக்க இயற்கையான வழிமுறைகள்

ulaka venkushda thinam inru anucharikkappadukirathu. innelaiyil tholil kaanappadum vellaith thiddukalai neekka, veeddilaeyae cheyyakkoodiya maruththuvaththai inkae kaanalaam. venkushdam enpathu uyirukku aapaththaana allathu thorrunooy alla. aanaal chamooka kannooddaththaal, ithu oru mana aluththam neraintha nooyaakavae irukkirathu. ithanai mulumaiyaaka neekka mudiyaathu. iruppinum uriya chikichchaiyin moolam thorraththil chirappaana maarraththaik kondu vara mudiyum. enavae venkushdaththaik kunamaakka uthavum veeddu vaiththiyankal kuriththu inkae … Continue reading "venkushdaththai poakka iyarkaiyaana valimuraikal"
venkushdaththai poakka iyarkaiyaana valimuraikal

உலக வெண்குஷ்ட தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தோலில் காணப்படும் வெள்ளைத் திட்டுகளை நீக்க, வீட்டிலேயே செய்யக்கூடிய மருத்துவத்தை இங்கே காணலாம்.

வெண்குஷ்டம் என்பது உயிருக்கு ஆபத்தான அல்லது தொற்றுநோய் அல்ல. ஆனால் சமூக கண்ணோட்டத்தால், இது ஒரு மன அழுத்தம் நிறைந்த நோயாகவே இருக்கிறது. இதனை முழுமையாக நீக்க முடியாது. இருப்பினும் உரிய சிகிச்சையின் மூலம் தோற்றத்தில் சிறப்பான மாற்றத்தைக் கொண்டு வர முடியும். எனவே வெண்குஷ்டத்தைக் குணமாக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் குறித்து இங்கே காணலாம்.

கற்றாழை

இதில் வெண்குஷ்டத்தை எதிர்த்து போராடும் அளவிற்கு முக்கிய வேதிப் பொருட்களைக் கொண்டுள்ளது. அதாவது, விட்டமின் ஏ, சி, பி12 மற்றும் ஃபோலிக் ஆசிட், காப்பர், கால்சியம், குரோமியம், ஜிங்க் உள்ளிட்டவை காணப்படுகின்றன. இந்த இயற்கையான தாவரம், வெண்குஷ்டத்திற்கு நல்ல பலன் அளிக்கும். கற்றாழை கரைசலை உள்ளுக்கும், வெளிப்புறத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய்

சளி, இருமல் முதல் புற்றுநோய் வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. இவை உடலில் இருக்கும் ஆபத்தான வேதிப்பொருட்களை நீக்குகிறது. தினசரி உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வது, மெலனோசைட்ஸ் நீக்கி, தோல் நிறமிகளை புதுப்பிக்கிறது. மேலும் தோலில் திட்டுக்கள் இருக்கும் இடங்களில் மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெயை நேரடியாக தடவலாம். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு தினசரி இருமுறை செய்வது நல்லது.

இஞ்சி

ரத்த சுழற்சியை அதிகரித்து, மெலனின் சுரப்பிற்கு உதவுகிறது. இஞ்சியை சிறிய துண்டாக, வெள்ளைத் திட்டுக்கள் இருக்கும் இடத்தில் தடவலாம். பின்னர் இஞ்சி காயும் வரை அப்படியே விடவும். சில வாரங்களுக்கு தினசரி 1-2 முறை செய்து வருவது நல்ல பலனை அளிக்கும். இஞ்சி வேரில் இருந்து எடுக்கப்பட்ட இஞ்சி சாற்றை புதினாவுடன் சேர்த்து குடித்தால் சிறப்பான மருத்துவப் பயனை

 

 

அளிக்கும்.

Popular Post

Tips