சத்தான பச்சைப் பயறு சுண்டல் தயாரிப்பது எப்படி?

athikalavu chaththukkal neraintha pachchaippayarai adikkadi unavil chaerththu kolvathu nallathu. inru pachchaippayaril chundal cheyvathu eppadi enru paarkkalaam. pachchai milakaay – 2 ijchi – chiriya thundu thaenkaayth thuruval – chirithalavu uppu – thaevaiyaana alavu elumichchaich chaaru (virumpinaal) thaalikka: enney, kaduku, kaayntha milakaay, uluththam paruppu, perunkaayam, karivaeppilaicheymurai: pachchaip payarai verum kadaayil poaddu chirithu naeram varuththa pinnar thanneeril ooravaikkavum. … Continue reading "chaththaana pachchaip payaru chundal thayaarippathu eppadi?"
chaththaana pachchaip payaru chundal thayaarippathu eppadi?

அதிகளவு சத்துக்கள் நிறைந்த பச்சைப்பயறை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பச்சைப்பயறில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய்த் துருவல் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு (விரும்பினால்)

தாளிக்க:
எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலைசெய்முறை:

பச்சைப் பயறை வெறும் கடாயில் போட்டு சிறிது நேரம் வறுத்த பின்னர் தண்ணீரில் ஊறவைக்கவும்.

நீரை வடித்து, புதிதாக அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து மீண்டும் நீரை ஒட்ட வடிக்கவும்.

தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சுத் துண்டு, உப்பை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

வேகவைத்த பயறு, அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

விரும்பினால் இறக்கியதும் சில துளிகள் மட்டும் எலுமிச்சைச் சாறு பிழியலாம். இது நாம் தவறுதலாக அதிக உப்போ, காரமோ சேர்த்திருந்தால் சரிசெய்யும். மேலும் மேலும் சாப்பிடும் ஆசையைத் தூண்டும். சூப்பரான சத்தான பச்சைப் பயறு சுண்டல் ரெடி.

Popular Post

Tips