விநாயகர் சதுர்த்தியில்  அதிர்ஷ்டத்தை அள்ளும்  ராசி எது?

maesham: kadinamaana kaariyankalaiyum elithaaka mudip peerkal. kalyaanap paechchu vaarththai chaathakamaaka mudiyum. manaivi valiyil nalla cheythi undu. viyaapaaraththil puthiya vaadikkaiyaalarkal thaedi varuvaarkal. uthyoakaththil chaka ooliyarkalukku uthavuveerkal. thiramaikal velippadum naal. rishapam: panappulakkam athikarikkum. uravinarkal, nanparkal unkalai kalanthaaloachiththu chila mudivukal eduppaarkal. viேshachankalai munnenru nadaththu veerkal. arachaal anukoolam undu. viyaa paaraththil anupavamikka vaelaiyaadkalai thaeduveerkal. uthyoakaththil thalaimaikku nerukkamaaveerkal. amokamaana naal. … Continue reading "vinaayakar chathurththiyil  athirshdaththai allum  raachi ethu?"
vinaayakar chathurththiyil  athirshdaththai allum  raachi ethu?

மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப் பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். விேஷசங்களை முன்னின்று நடத்து வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியா பாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உத்யோ கத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

கடகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும்.மகளுக்கு நல்ல வரன் அமையும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, களைப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் மற்றவர் களை நம்பி முக்கிய முடிவு களை எடுக்க வேண்டாம்.சிலர் உங்களை தாழ்த்திப்பேசினாலும் கலங்காதீர்கள். உத்யோ கத்தில் மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும். தானுண்டு தன் வேலையுண்டுஎன்றிருக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். திட்ட மிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

தனுசு: எந்த பிரச்னையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழையகடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூட்சு மங்களை உணர்வீர்கள். சிறப்பான நாள்.

மகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியா பாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகா ரிகள் முக்கியத்தும் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்தபிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மீனம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங் களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

Popular Post

Tips