காமெடியனாகத் தான் நடிப்பேன் -யோகி பாபு

thamil chinemaavil munnane kaamediyanaaka palvaeru padankalil nadiththu varum yoaki paapu thanakku herovaaka nadikkum aachai illai enrum, kadaichi varai kaamediyanaakath thaan nadippaen enrum kooriyirukkiraar. yoaki paapu thamil chinemaavil munnane kaamediyanaakath thikalnthu varukiraar. vijayyudan ‘charkaar’, ajiththudan ‘visvaacham’, ‘100% Kadhal’, ‘kuppaththu raaja’, ‘pariyaerum perumaal’ ullidda pala padankal ivar kaivacham ullana. nayanthaaraa kooda thannudaiya aduththaduththa padankalil yoaki paapu irukkumaaru paarththuk … Continue reading "kaamediyanaakath thaan nadippaen -yoaki paapu"
kaamediyanaakath thaan nadippaen -yoaki paapu

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக பல்வேறு படங்களில் நடித்து வரும் யோகி பாபு தனக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை இல்லை என்றும், கடைசி வரை காமெடியனாகத் தான் நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். யோகி பாபு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாகத் திகழ்ந்து வருகிறார். விஜய்யுடன் ‘சர்கார்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்’, ‘100% காதல்’, ‘குப்பத்து ராஜா’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்கள் இவர் கைவசம் உள்ளன.

நயன்தாரா கூட தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் யோகி பாபு இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் யோகி பாபு ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின. ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இந்தப் படத்தை இயக்கப் போகிறார் என்றும் செய்தி வந்தது. ஆனால் யோகி பாபு இதை மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் அந்தப் படத்தில் காமெடியனாக மட்டுமே நடிப்பதாகவும், ஆனால் படம் முழுக்க வருவேன் என்றும் கூறியுள்ளார்.வெளி நாட்டுக்காரர் ஒருவருக்கும், நாய்க்கும் இடையிலான கதைதான் அந்தப் படம் என்று தெரிவித்துள்ள யோகி பாபு, தான் அதில் கூர்க்கா வேடத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார். தனக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை இல்லை என்றும், கடைசி வரைக்கும் காமெடியனாகத்தான் நடிப்பேன் என்றும் யோகி பாபு கூறியிருக்கிறார்.

Popular Post

Tips