சோர்வுக்கான காரணமும் : தீர்வு

eppavum choarvaa irukku enru nenaikkireenkalaa? keelkanda vishayankalil neenkal chariyaaka irukkireenkalaa enru unkalai parichoathiththuk kollunkal. pukai pidippavaraaka irunthaal udanadiyaaka athanai neruththunkal. neruththiya nemidaththilirunthu anaeka nanmaikalai udalil unarveerkal. ennavo theriyalai. eppavum choarvaa irukku enru nenaikkireenkalaa? keelkanda vishayankalil neenkal chariyaaka irukkireenkalaa enru unkalai parichoathiththuk kollunkal. neenkal athika charkkarai eduththuk kolkinreerkalaa? chilarukku etharkeduththaalum charkkarai vaendum. aththodu sveeds illaamal irukka … Continue reading "choarvukkaana kaaranamum : theervu"
choarvukkaana kaaranamum : theervu

எப்பவும் சோர்வா இருக்கு என்று நினைக்கிறீங்களா? கீழ்கண்ட விஷயங்களில் நீங்கள் சரியாக இருக்கிறீங்களா என்று உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

புகை பிடிப்பவராக இருந்தால் உடனடியாக அதனை நிறுத்துங்கள். நிறுத்திய நிமிடத்திலிருந்து அநேக நன்மைகளை உடலில் உணர்வீர்கள். என்னவோ தெரியலை. எப்பவும் சோர்வா இருக்கு என்று நினைக்கிறீங்களா? கீழ்கண்ட விஷயங்களில் நீங்கள் சரியாக இருக்கிறீங்களா என்று உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதிக சர்க்கரை எடுத்துக் கொள்கின்றீர்களா?

சிலருக்கு எதற்கெடுத்தாலும் சர்க்கரை வேண்டும். அத்தோடு ஸ்வீட்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்ற பழக்கம் இருக்கும். இத்தகையோர் எப்பவுமே சோர்வாகவே இருப்பார்கள். இவர்களுக்கு சர்க்கரை, இனிப்பு பண்டங்கள் மைதா வேண்டும். இதனைச் செய்தாலே அவர்கள் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஆகிவிடுவர். நீங்கள் தேவையான அளவு உடற்பயிற்சி செய்கின்றீர்களா? உடற்பயிற்சி என்ற பெயரில் சிறு பிள்ளைகள் போல் கையை காலை நீட்டுவது, வாரம் ஒரு முறை 10 நிமிடம் நடப்பது போன்றவை எல்லாம் உடற்பயிற்சி ஆகாது.

அன்றாடம் குறைந்தது 30 நிமிடங்கள் நடங்கள். யோகா செய்யுங்கள். கண்டிப்பாய் சக்தி கூடும். காலை உணவை தவிர்ப்பவர்கள் நாள் முழுவதும் சோர்வாகவே இருப்பார்கள். அத்துடன் நெஞ்செரிச்சல். வயிற்றுப்புண் என பாதிப்புகள் தொடரும். மேலும் காலையில் காபி, டீ என மதியம் வரை வயிற்றில் ஆசிட் ஊற்றுவதும் உடலை வெகுவாய் பாதிக்கும். நெடுநேரம் உணவின்றி இருப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவினை குறைத்துவிடும்.

முழுதானிய உணவு. புரதம்-முட்டை, பால்வகை, கொட்டை வகை உணவுகளுக்கு மாறுங்கள். சோர்வு பறந்து ஓடி விடும். நகராது ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்து இருப்பது. உங்களது சக்தியினை வெகுவாய் இழக்கச் செய்யும். அசையாமல் வெகு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது இருதயத்தினை வெகுவாய் பாதிக்கும். ஒரு மணிக்கொருமுறை 3-5 நிமிடங்கள் வரை நடங்கள். உடலில் ஆக்ஸிஜன் சக்தி கூடும். சோர்வு நீங்கும்.

* அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் உள்ளதா? அளவான ஓரிரு முறை காபி குடிக்கும் பழக்கம் ஒரு ஊக்குவிப்பாக இருக்கும். மதியம் 2 மணிக்கு பிறகே காபி, டீ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது. அதிக காபி, அடிக்கடி காபி, டீ இவை இரண்டும் உங்களை மிகவும் சோர்வாக்கி விடும்.

* மிகவும் குறைவாகவே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கண்டிப்பாய் மிகவும் சோர்வாகத்தான் இருப்பீர்கள். சிலருக்கு தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் குடியுங்கள் என்று சொல்லி கொண்டே இருக்க வேண்டும். இத்தகையோர் கையில் ஒரு பாட்டில் தண்ணீர் கண்டிப்பாய் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்திற்கொரு முறை கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். சோர்வு நீங்கும். மேலும் உடலில் தேவையான நீர் சத்து இல்லை என்றால் பல பாதிப்புகள் ஏற்படும்.

* நன்கு நிமிர்ந்து அமருங்கள். கோணல் மாணலாக மடங்கி அமர்வது உடலில் சோர்வினை ஏற்படுத்தும். எனவே நிமிர்ந்து அமருங்கள்.

* ஸ்நாக்ஸ் என்ற பெயரில் அதிக சர்க்கரை, கேக், மைதா, எண்ணெயில் பொரித்தது என சாப்பிடாதீர்கள். கடலை உருண்டை, பொட்டு கடலை உருண்டை, எள் உருண்டை, கொட்டை வகைகள், பழங்கள் இவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள். கல்லீரலின் முக்கியத்துவம் கருதியும் அது உடலுக்கு செய்யும் நன்மைகள் கருதியும் இவற்றினை மருத்துவ உலகம் மிகவும் வலியுறுத்தி வருகின்றது.

இந்த கல்லீரல் பாதிக்கப்படும் பொழுது சில அறிகுறிகளை காண்பிக்கும்.

* படபடப்பு, * சரும அலர்ஜி, * எதிலும் அதிக கவனம் செலுத்த முடியாமை போன்ற அறிகுறிகள் வெளிப்படும். மேலும்

* எப்பொழுதும் சோர்வு, * எந்த வேலையும் செய்யமனம் இல்லாமை, * தலைவலி, * மூட்டுகளில் வலி, * தசைகளில் வலி, * அதிக வியர்வை, * கொழுப்புகளை செரிப்பதில் கடினம், * வயிற்றுவலி, * வயிற்று போக்கு, * மலச்சிக்கல், * மனச்சோர்வு, * எடைகூடுதல், * சிறிது கூட ரசாயனங்களை ஏற்க முடியாமை, * வாய்துர்நாற்றம் ஆகிய அறிகுறிகள் தென்படும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கொழுப்பில்லாத உணவு, காய்கறி உணவு இவற்றினை எப்பொழுதுமே கடைபிடிப்பது நல்லது.

மருத்துவ உலகில் அனைத்து மருத்துவர்களும் அதிசயப்படும் ஒரு விஷயம் உள்ளது. எந்த நோயையும் விட ஆண்களும், பெண்களும் தலைமுடி கொட்டும் பிரச்சினைக்கு அதிகம் கவலைப்படுகின்றனர். மிக அதிகமாகவும் செலவழிக்கின்றனர். முடி கொட்டுதல், தேய்தல் தலையில் சில இடங்களில் முடியின்மை இவைகளும் பல காரணங்களையே சொல்கின்றன.

* சரும பாதிப்பு, தலையில் கிருமி தாக்குதல், பொடுகு, சரும அலர்ஜி, அரிப்பு இவை முடி கொட்ட முக்கிய காரணம் ஆகின்றன.
* ஹார்மோன்கள் சீராக சுரக்காது இருப்பது.
* நீங்கள் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகள் காரணம்.
* சத்துணவு இன்மை

* அதிக ஸ்ட்ரெஸ்
* பல ரசாயன கலவைகளை தலையில் உபயோகித்தல்
போன்றவையும் முடி கொட்ட முக்கிய காரணங்கள் ஆகின்றன.

Popular Post

Tips