ஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் நன்மை தெரியுமா?

naam aajchanaeyarukku palavithamaana poojaikalum parikaara poojaikalum cheykirom. aajchanaeyarukku enna parikaarankal enna palanai tharum enru paarkkalaam. vadaimaalai anumaanudaiya thaay ajchalithaevi than makan thidamaakavum aarokkiyamaakavum irukka ulunthu vadaicheythu koduththathaaka koorappadukinrathu. ithanalaiyae chilar aajchanaeya vadaimaalaiyai anevippar. verrilaimaalai cheethaiyaiththaedi achoakavanaththil chanthiththa poathu cheethai avarukku verrilaik kodi aneviththu avarai vaalththinaar. venney chaaththuthal venney cheekkiramaaka urukum thanmai udaiyathu antha vennai urukuvatharku … Continue reading "aajchanaeyar valipaaddaal kidaikkum nanmai theriyumaa?"
aajchanaeyar valipaaddaal kidaikkum nanmai theriyumaa?

நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம். ஆஞ்சநேயருக்கு என்ன பரிகாரங்கள் என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.

வடைமாலை

அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக கூறப்படுகின்றது. இதனலையே சிலர் ஆஞ்சநேய வடைமாலையை அணிவிப்பர்.

வெற்றிலைமாலை

சீதையைத்தேடி அசோகவனத்தில் சந்தித்த போது சீதை அவருக்கு வெற்றிலைக் கொடி அணிவித்து அவரை வாழ்த்தினார்.

வெண்ணெய் சாத்துதல்

வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை ,அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,

சிந்தூரக் காப்பு

சீதையின் மகிழ்ச்சி கண்டு அனுமனுக்கு தன் உடம்பு முழுவதும் செம்மண் பூசிக் கொண்டாராம். இதனாக் சிந்தூரக் காப்பு அனுமனுக்கு பிடித்த ஒரு பொருள் ஆகும்.

ஜெய் ஸ்ரீ ராம் என்று மாலையாக அணிவித்தல்

ராம் ராம் என்று எழுதி மாலையாக அணிவித்தல் நமக்கு எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்கும் மகிமை கொண்டது.

வாலில் பொட்டு வைப்பது

அனுமனுக்கு சக்தி முழுவதும் தன் வாலில் தான். வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம் சித்தியாகிறது என்ற நம்பிக்கை.

Popular Post

Tips