எந்த நாளில் எந்த கடவுளை வணங்கவேண்டும்? 

vaaraththin ovvooru naalum ovvooru kadavulukku arpanekkappaddullathu. athanaal entha kadavulai entha naalanru tharichikka vaendum enpathai therinthu kollunkal. thinkal thinkadkilamai chivanukku ukantha thinankalul onraakum. thinkal neelakandanai virathamirunthu valipada ukantha naalaaka karuthappadukirathu. thinkalanru chivaperumaanukku paal, arichi marrum charkkarai padaiththidalaam. chevvaay hanumarai chevvaay kilamaikalil virathamirunthu valipadalaam. maelum, thurkkai ammanukkum mikavum ukantha naalaakum. chevvaay kilamaikalil virathamirunthu raaku kaalaththil elumichchai vilakku … Continue reading "entha naalil entha kadavulai vanankavaendum? "
entha naalil entha kadavulai vanankavaendum? 

வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. அதனால் எந்த கடவுளை எந்த நாளன்று தரிசிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

திங்கள்

திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த தினங்களுள் ஒன்றாகும். திங்கள் நீலகண்டனை விரதமிருந்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. திங்களன்று சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைத்திடலாம்.

செவ்வாய்

ஹனுமரை செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து வழிபடலாம். மேலும், துர்க்கை அம்மனுக்கும் மிகவும் உகந்த நாளாகும். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால் வாழ்க்கை வளம் பெரும்.

புதன்

விநாயகரை விரதமிருந்து வழிபட புதனே உகந்த தினமாக கருதப்படுகிறது. எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணங்கி விட்டுதான் தொடங்கவேண்டும்.

 

வியாழன்

விஷ்ணு பகவானை பொதுவாக வியாழக்கிழமை அன்று விரதமிருந்து வழிபடுவார்கள். விஷ்ணு பகவானின் மனைவியான லக்ஷ்மி தேவியை வணங்கவும் இதுவே உகந்த நாள்.

அதேபோல வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தி வழிபட உகந்த நாளாகும்.

வெள்ளி

துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வழிபட வேண்டும். இந்த நாளில் அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடலாம்.

சனி

சனிக்கிழமை சனி கிரகத்தை சார்ந்ததாகும். சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் காளி தேவியை வழிபடலாம்.ஞாயிறு

நவகிரகத்தின் முதன்மையான கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுவது உகந்தது. சூரிய தோஷம் இருப்பவர்கள் இந்த நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் இன்னல்கள் தீரும் என நம்பப்படுகிறது.

ஞாயிறு

நவகிரகத்தின் முதன்மையான கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுவது உகந்தது. சூரிய தோஷம் இருப்பவர்கள் இந்த நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் இன்னல்கள் தீரும் என நம்பப்படுகிறது.

Popular Post

Tips