பூமியில் வாழ்ந்த மிகப் பெரிய உருவ விலங்குகள்

ulakil ithuvarai vaalntha mikapperiya vilankinamaaka dainoocharas karuthappadukinrathu.   athanai naeril kandavarkal yaarum illai enra poathilum athan echchankal, chuvadukal marrum kandaedukkappaddulla elumpuk koodu enpavarrin adippadaiyil mukapperiyathaaka athu karuthappadukinrathu.   athaepoala vaeru pala mikap periya uruvaththilaana vilankukalum ippoomiyil vaalnthullathaaka karuthappadukinrana.   avai alinthuviddapoathilum avarrin chuvadukal kandupidikkappaddullana.   avvaaru kandupidikkappadda vilankukalin chuvadukal parriya thokuppae ithu.     1. … Continue reading "poomiyil vaalntha mikap periya uruva vilankukal"
poomiyil vaalntha mikap periya uruva vilankukal
உலகில் இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமாக டைனோசரஸ் கருதப்படுகின்றது.

  அதனை நேரில் கண்டவர்கள் யாரும் இல்லை என்ற போதிலும் அதன் எச்சங்கள், சுவடுகள் மற்றும் கண்டெடுக்கப்பட்டுள்ள எழும்புக் கூடு என்பவற்றின் அடிப்படையில் முகப்பெரியதாக அது கருதப்படுகின்றது.

  அதேபோல வேறு பல மிகப் பெரிய உருவத்திலான விலங்குகளும் இப்பூமியில் வாழ்ந்துள்ளதாக கருதப்படுகின்றன.

  அவை அழிந்துவிட்டபோதிலும் அவற்றின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளின் சுவடுகள் பற்றிய தொகுப்பே இது.

 

  1. கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பாம்பின் சுவடு
இப்பாம்பானது அனெகொண்டாவைப் போன்ற உலகில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மிகப்பெரிய பாம்பாகும்.

  இவை சுமார் 60 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளதுடன் சுமார் 42 அடி நீளமும், 1,135 கிலோ நிறையும் கொண்டவையாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

  2. எருமை உருவ கொறிணி (Rodent)
கொறிணி எனப்படுவது அணில் போன்ற விலங்கினமாகும்.

  உருகுவே நாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு சுமார் 53 சென்ரி மீற்றர் உயரமுடைய 1000 கிலோ நிறையுடைய கொறிணியின் எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

  இவை இற்றைக்கு சுமார் 2- 4 மில்லியன் வருடங்களுக்கு முதல் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

 

 

  3. மடகஸ்காரில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தவளை
உலகில் இதுவரை வாழ்ந்தவற்றில் மிகப்பெரியதாக கருதப்படும் பிரமாண்ட தவளை எச்சத்தினை ஆராய்ச்சியாளர்கள் மடகஸ்கார் நாட்டில் கண்டுபிடித்தனர்.

 

இது 41 சென்றி மீற்றர் உயரமும், 4.5 கிலோ கிராம் நிறையும் கொண்டிருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

  4. பெரு நாட்டில் வாழ்ந்த பிரமாண்ட பென்குயின்கள்
தென் அமெரிக்காவில் சுமார் 35 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கூறப்படும் பிரமாண்ட பென்குயின்களே இவை.

  இவற்றின் சுவடுகள் பெருவுன் அடகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

  இவற்றின் உயரம் சுமார் 1.5 மீற்றர்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

  5. மனிதனை விட பெரிய கடல் தேள்
மனிதனைவிட பெரியதும் சுமார் 8.2 அடி உயரமானதும் சுமார் 390 மில்லியன் வருடங்கள் பழமையானதுமான கடல் தேளின் எச்சங்கள் 2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன.

  இவை அக்காலப்பகுதியில் கடலில் வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

  6. வரலாற்றுக்கு முற்பட்ட கங்காருகள்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இவ்வகை 7-10 அடி வரையான உயரத்தினை கொண்ட கங்காருகள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

Popular Post

Tips