குழந்தைகள் தினமும் எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்

kulanthaikal oadiyaadi vilaiyaadumpoathu thanneer viyarvaiyaay veliyaeri vidukirathu. athanaal udalukku thaevaiyaana thanneer alavu kuraivathaal thaakam edukkirathu. thanneer kudikkavillai enraal udalil veppam athikariththu chiruvarkalukku theenku aerpada vaayppu athikarikkum. chila kulanthaikal thanneer kudikkavae maruththaalum perrorkal varpuruththiyaavathu kurippidda alavu thanneeraik kudikkach cheyya vaendum. nam udalin cheyalpaadukalai muraiyaaka cheyalpaduvatharku neer mukkiya panku vakikkirathu. nam udalil ulla perumpaalaana uruppukal neerinaal uruvaanathu. … Continue reading "kulanthaikal thinamum evvalavu neer kudikka vaendum"
kulanthaikal thinamum evvalavu neer kudikka vaendum

குழந்தைகள் ஓடியாடி விளையாடும்போது தண்ணீர் வியர்வையாய் வெளியேறி விடுகிறது. அதனால் உடலுக்கு தேவையான தண்ணீர் அளவு குறைவதால் தாகம் எடுக்கிறது. தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் வெப்பம் அதிகரித்து சிறுவர்களுக்கு தீங்கு ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும். சில குழந்தைகள் தண்ணீர் குடிக்கவே மறுத்தாலும் பெற்றோர்கள் வற்புறுத்தியாவது குறிப்பிட்ட அளவு தண்ணீரைக் குடிக்கச் செய்ய வேண்டும்.

நம் உடலின் செயல்பாடுகளை முறையாக செயல்படுவதற்கு நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உடலில் உள்ள பெரும்பாலான உறுப்புகள் நீரினால் உருவானது. தசைகள் 70 சதவீதமும் மூளை 90 சதவீதமும் இரத்தம் 83 சதவீதமும் நீரால் உருவாகியுள்ளது.

காணும் வயதுடையவர்களுக்கு அவர்கள் தினசரி குறைந்தபட்சம் குடிக்க வேண்டிய நீரின் அளவு இது:

1 முதல் 3 வயது வரை -4 டம்ளர்கள்

4 முதல் 8 வயது வரை-5 டம்ளர்கள்

9 முதல் 13 வயது வரை – ஆண்8 டம்ளர்கள்,பெண்7 டம்ளர்கள்

11முதல் 18 வயது வரை – ஆண் 11 டம்ளர்கள், பெண் -8 டம்ளர்கள்

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1.5 லிட்டர் நீராவது கட்டாயம் குடிக்கவேண்டும். கட்டட வேலை, கல் உடைப்பது, மரம் வெட்டுவது போன்ற வெயிலில் வேலை செய்பவர்கள் 3 லிட்டர் நீர் குடிக்க வேண்டும். கோடைகாலம் வந்துவிட்டால் 4 முதல் 5 லிட்டர் நீர் குடிக்கவேண்டும்.

டம்ளரில் நன்றாக வாய் வைத்து, மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முழுங்க வேண்டும். அப்போதுதான் எச்சில் கலந்து வயிற்றுக்குள் சென்று உணவை ஜீரணிக்க உதவும்.

போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால் தலைவலி, சோர்வு போன்ற உபாதைகள் அதிகம் ஏற்படும்.

முகத்தில் ஏற்படும் முகப்பரு, அழுக்குகள் மற்றும் எண்ணெய் காரணத்தால் ஏற்படுகிறது. இத்தகைய அழுக்குகளை வெளியேற்றி பருக்கள் வராமல் தடுக்க தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும்.

உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கு ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்ல தண்ணீர் உதவுகிறது.

உடலில் சேறும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதற்கு தண்ணீரை அதிகம் குடிக்கவேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் அசிடிட்டி நீங்கி உடல் ஃப்ரெஷாக இருக்க உதவுகிறது.

Popular Post

Tips