நீங்கள் பொடுகுத்தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா?

thalai mudi enpathu aan enraalum pen enraalum mika mukkiya onraaka karuthappaddu varukirathu. kurippaaka ithu oruvarin alakai merukaerra perithum uthavukirathu. chirithu mudi uthirnthaalae palaraal thaanki kolla mudiyaathu. mudi uthirum pirachchinai inru palarukkum irukkirathu. mudi uthirvathu oru chila mukkiya kaaranekalaal aerpadukirathu. ithil poaduku thollaiyum adankum. poaduku pirachchinaiyae mudi uthira muthanmaiyaana kaaranamaaka ullathu ena maruththuvarkal koorukinranar. poaduku thollaikku … Continue reading "neenkal poadukuththollaiyil irunthu vidupada vaendumaa?"
neenkal poadukuththollaiyil irunthu vidupada vaendumaa?

தலை முடி என்பது ஆண் என்றாலும் பெண் என்றாலும் மிக முக்கிய ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. குறிப்பாக இது ஒருவரின் அழகை மெருகேற்ற பெரிதும் உதவுகிறது. சிறிது முடி உதிர்ந்தாலே பலரால் தாங்கி கொள்ள முடியாது. முடி உதிரும் பிரச்சினை இன்று பலருக்கும் இருக்கிறது. முடி உதிர்வது ஒரு சில முக்கிய காரணிகளால் ஏற்படுகிறது. இதில் பொடுகு தொல்லையும் அடங்கும். பொடுகு பிரச்சினையே முடி உதிர முதன்மையான காரணமாக உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொடுகு தொல்லைக்கு நாம் பல வித ஷாம்புக்களை பயன்படுத்தி பார்த்திருப்போம். ஆனால், அவை சிறந்த பலனை தராது. முடியில் உள்ள பொடுகை எப்படி போக்குவது என குழம்பி கொண்டிருப்போர்களுக்கே இந்த பதிவு. ஆயுர்வேத முறையை பயன்படுத்தி பொடுகை விரைவில் நீக்கிவிடலாம். எவ்வாறு என்பதை இனி அறிவோம்.

பொடுகும் முடி-யும்… பொடுகு ஏற்பட முதல் காரணமாக இருப்பது தலை முடியின் அழுக்குகள் தான். தலையில் அதிகமாக அழுக்கு சேர்ந்தால் பொடுகு உருவாகும். முதலில் சிறிய அளவில் இது ஏற்பட கூடும். பின் இவற்றின் அளவு அதிகமாகி முடி உதிர்வை ஏற்படுத்த கூடும். எனவே, பொடுகு அதி பயங்கரமானதாக கருதப்படுகிறது.

வேம்பும் எலுமிச்சையும் பொடுகை போக்குவதற்கு பல வழி முறைகள் இருந்தாலும், இந்த ஆயர்வேத முறை மிக அற்புதமான பலனை தரும். இதனை பயன்படுத்தி வந்தால் 2 வாரங்களில் பொடுகு தொல்லை நீங்குமாம். தேவையானவை :- காய் நிறைய வேப்பிலை இலைகள் எலுமிச்சை சாறு 3 ஸ்பூன்

செய்முறை :- முதலில் வேப்பிலையை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றின் சாற்றை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, எலுமிச்சை சாறை இதனுடன் சேர்த்து தலையில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் பொடுகு தொல்லை குணமாகும்.

கற்பூர வைத்தியம்..! கற்பூரத்தை தலைக்கு பயன்படுத்தினால் நல்ல பயனை எதிர்பாக்கலாம். இவை குறிப்பாக பொடுகு தொல்லையை உடனடியாக நீக்குவதில் இது முக்கிய ஆயுர்வேத முறையாம். இந்த வைத்தியத்தை நம் பாட்டி காலத்திலே பயன்படுத்தினர். தேவையானவை :- தேங்காய் எண்ணெய் 5 ஸ்பூன் சிறிதளவு கற்பூரம்

செய்முறை :- தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு கற்பூரம் சேர்த்து ஒரு பாட்டிலில் கலந்து வைத்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தினமும் இரவு தூங்குவதற்கு முன் முடியின் அடி வேரில் நன்றாக தடவி மறுநாள் தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

மூன்றும் முக்கியம்… முடியை பொலிவு பெற செய்யவும், பொடுகு தொல்லையை சரி செய்யவும் இந்த 3 முக்கிய மூலிகைகள் பயன்படும். இவற்றில் முதன்மையான ஆற்றல்கள் உள்ளன. தேவையானவை :- நெல்லிக்காய் 2 சிகைக்காய் 7 ரீத்தா 5

Popular Post

Tips