சர்க்கார் பாடல்களை கம்போஸ் செய்யும் : ஏ.ஆர்.ரகுமான்

chennai: charkaar thiraippadaththin paadalkalai meendum pathivu cheykiraar ae.aar.rahmaan. aeaar.murukathaas iyakkaththil vijay nadiththulla thiraippadam charkaar. ippadam theepaavalikku rileesaka ullathu. padaththin paadalkal rileechaaki thamil rachikarkal maththiyil nalla varavaerpaip perrullathu. nadikar vijaykku thamilakaththirku aduththathaaka kaeralaavil aeraalamaana rachikarkal irukkiraarkal enpathu therintha vishayam. athupoal, thelunku chinemaavilum maas herovaaka valam vara aarampiththirukkiraar vijay. athanaal charkaar thiraippadaththai thelunku moaliyilum moalimaarram cheythu veliyida … Continue reading "charkkaar paadalkalai kampoas cheyyum : ae.aar.rakumaan"
charkkaar paadalkalai kampoas cheyyum : ae.aar.rakumaan

சென்னை: சர்கார் திரைப்படத்தின் பாடல்களை மீண்டும் பதிவு செய்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.

படத்தின் பாடல்கள் ரிலீசாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் விஜய்க்கு தமிழகத்திற்கு அடுத்ததாக கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயம். அதுபோல், தெலுங்கு சினிமாவிலும் மாஸ் ஹீரோவாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார் விஜய். அதனால் சர்கார் திரைப்படத்தை தெலுங்கு மொழியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளனர்.

தற்போது சர்கார் திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கான வேலைகளில் ஏஆர்.ரஹ்மான் ஈடுபட்டுள்ளார். தமிழில் விவேக் பாடல் எழுதியதுபோல், சர்கார் படத்தின் தெலுங்கு பாடல்களை சந்திரபோஸ் மற்றும் ராக்கி வனமலி எழுதியுள்ளனர். தெலுங்கிலும் நவம்பர் 6ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சர்கார் திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Popular Post

Tips