உயிரைக்காப்பாற்றிய facebook

puthankilamai paris 4 kaavarthuraiyinarukku oar avachara alaippu vanthathu. inaiyaththil mukanool pakuthiyil nanparkalin cheythikalaip padiththukkondiruntha Vendée pakuthiyiliruntha ilaijanaalaeyae intha avachara alaippu alaikkappaddirunthathu.   ivarathu parichil vachikkum nanpanen chamookavalaiththalaththil thanathu vaalnaalaith thaan mudiththuk kollappoavathaaka ariviththirunthathai vaachiththa ivar udanadiyaaka kaavarthuraiyinarukkuth thakavalai valankiyullaar. kaavarthuraiyinar thakaval arinthavudan udanadiyaaka nadavadikkaiyil irankinar. antha paris nanpanen peyarum chelpaechi ilakkamum arinthiruntha antha nanpar avarin … Continue reading "uyiraikkaappaarriya facebook"
uyiraikkaappaarriya facebook
புதன்கிழமை பரிஸ் 4 காவற்துரையினருக்கு ஓர் அவசர அழைப்பு வந்தது. இணையத்தில் முகநூல் பகுதியில் நண்பர்களின் செய்திகளைப் படித்துக்கொண்டிருந்த Vendée பகுதியிலிருந்த இளைஞனாலேயே இந்த அவசர அழைப்பு அழைக்கப்பட்டிருந்தது.

  இவரது பரிசில் வசிக்கும் நண்பனின் சமூகவலைத்தளத்தில் தனது வாழ்நாளைத் தான் முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருந்ததை வாசித்த இவர் உடனடியாக காவற்துறையினருக்குத் தகவலை வழங்கியுள்ளார். காவற்துறையினர் தகவல் அறிந்தவுடன் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். அந்த பரிஸ் நண்பனின் பெயரும் செல்பேசி இலக்கமும் அறிந்திருந்த அந்த நண்பர் அவரின் முகவரியை அறிந்திருக்கவில்லை.

  காவற்துறையினர் அந்த செல்பெசி இலக்கத்திற்குப் பலமுறை அழைத்தும் எந்தப் பயனும் இல்லை. செல்பேசிச் சேவை வழங்குனருடன் தொடர்பு கொண்ட காவற்துறையினர் செல்பேசிக்குரியவரின் முகவரியைப் பெற்றனர். ஆனால் செல்பேசிப் பதிவில் இருந்த பெயரும் தற்கொலை செய்ய இருப்பவரின் பெயரும் வேறு வேறாக இருந்தது. அதனால் செல்பேசிச் சேவை வழங்குனரிடம் மீண்டும் தொடர்பு கொண்ட காவற்துறையினர் செய்மதித் தடயவியல் மூலம் செல்பெசி இருக்கும் இடத்தை அறியும்படி கேட்டிருந்தனர்.

  சில நிமிடங்களிலேயே பரிசின் 10வது பிரிவில் செல்பேசி இருப்பது தெரியவந்தது. அங்கு தொடர்பு கொண்டபோது தற்கொலை செய்ய இருப்பவரின் தந்தையே இருந்துள்ளார். அங்கேயே தனது செல்பேசியைத் தற்கொலை செய்ய இருப்பவர் விட்டுச் சென்றுள்ளார். காவற்துறையினரிடம் தகவலை அறிந்த தந்தையார் அதிர்ச்சியடைந்து உடனடியாக மகனின் முகவரியை வழங்கினார்.

 

உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்த காவற்துறையினரும் அவசர மருத்துவ முதலுதவிப்பிரிவினரும் அங்கு தற்கொலை முயற்சியிலீடுபட்டுக் கொண்டிருந்தவரைக் காப்பாற்றியுள்ளனர். முதலுதவிப்பிரிவினர் அங்கு சென்ற போது அந்த நபர் தனது மணிக்கட்டை ஏற்கனவே அறுத்து விட்டிருந்தார். உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் உயிராபத்தின்றிக் காப்பாற்றப்ட்டுள்ளார். அவரின் நன்மை கருதி காவற்துறையினர் அவரின் பெயர் விபரங்களை வழங்கவில்லை.

  சமூகவலைத்தளத்தில் இருந்த தகவலைப்பார்த்து அதைத் தீவிரமாக எடுத்து நண்பரும் காவற்துறையினரும் நடவடிக்கையில் இறங்கியதால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த உயிரின் பெறுமதியை அறிந்த நாடுகள்கூட கொத்துக் கொத்தாக உயிர்கள் வேறு நாடுகளில் அழிக்கப்படும் போது மௌனம் காப்பது ஏன் என்பது மட்டும் புரியவில்லை.

 

 

Popular Post

Tips