கடாபிக்கு எதிராகப் போர்

inru kaalai ai.naa paathukaappuk kavunchil oru theermaanaththai neraivaerriyullathodu, lipiyaa naaddukku athipar kaenal kadaapikku ethiraakap poar thodukka athu thanathu anumathiyai valankiyullathaaka ariyappadukirathu.   charrunaeraththukku munnar kidaikkapperra intha anumathiyai aduththu piriththaaneya marrum pirejchu veemaanappadaiyinar thamathu thaakkuthalai innum chila maneththiyaalankalil aarampikka iruppathaaka ariyappadukirathu. lipiya naaddu athipar thanathu naaddukkumael entha oru vimaanamum parakkakkoodaathu ena uththaravu pirappiththullaar.   ich cheythiyai … Continue reading "kadaapikku ethiraakap poar"
kadaapikku ethiraakap poar
இன்று காலை ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதோடு, லிபியா நாட்டுக்கு அதிபர் கேணல் கடாபிக்கு எதிராகப் போர் தொடுக்க அது தனது அனுமதியை வழங்கியுள்ளதாக அறியப்படுகிறது.

  சற்றுநேரத்துக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற இந்த அனுமதியை அடுத்து பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு வீமானப்படையினர் தமது தாக்குதலை இன்னும் சில மணித்தியாலங்களில் ஆரம்பிக்க இருப்பதாக அறியப்படுகிறது. லிபிய நாட்டு அதிபர் தனது நாட்டுக்குமேல் எந்த ஒரு விமானமும் பறக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  இச் செய்தியை நாம் பிரசுரிக்கும் வேளை, லிபிய நாட்டு வெளியுறவு அமைச்சர், தாம் போராட்டம் நடத்தும் எந்த ஒரு மக்கள் மீது தாக்குதல் நடத்தமாடோம் என்றும், தாம் தமது இராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இருப்பினும் அமெரிக்கா கேணல் கடாபியை பதவி விலகுமாறு கோரியுள்ளது. அது நடைபெறாவிட்டால் தாக்குதல் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிபிய நாட்டில் உள்ள விமான எதிர்ப்புக் கட்டமைப்புகளை முதலில் தாக்கியழித்து, பின்னர் நேட்டோ கூட்டுப்படைகளை லிபியாவில் தரையிறக்க அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், விமானத் தாக்குதல்களை பிரித்தானியா முன்னெடுக்க உள்ளதாக அறியப்படுகிறது.

  இருப்பினும் லிபிய அதிபர் கேணல் கடாபி, உடனடியாக செயல்பாட்டில் இறங்கவேண்டிய நிலை தோன்றியுள்ளது. இல்லையே சதாம் குசைன்போல சிறைப்பிடிக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

 

Popular Post

Tips