சிவலிங்கத்தின் பொருள் என்ன தெரியுமா?

chivalinkam moonru paakamaaka pirikkappadukiratho athaavathu mael pakkam chivan, nadupakkam vishnu, adippakkam pirammaa enru chivalinkaththai kooruvar. ovvooru kuruvum ovvooru vithamaaka chivalinkaththin arththam kooruvaarkal. naam vaachiyoakaththin moolamaaka vinthuvai chakkarankalin valiyaaka chulimunaikku aerri athu naachi thuvaaram valiyaaka ulnaakkil irankum. intha irankum thiravamae rachamane aakum. eppadi aavudayaar paakaththil linkapaakaththai maruntha chaaththi inaiththu pinpu chivaperumaanaaka paarkkiromo, athai poalavae intha thiravamaanathu … Continue reading "chivalinkaththin poarul enna theriyumaa?"
chivalinkaththin poarul enna theriyumaa?

சிவலிங்கம் மூன்று பாகமாக பிரிக்கப்படுகிறதோ அதாவது மேல் பக்கம் சிவன், நடுபக்கம் விஷ்ணு, அடிப்பக்கம் பிரம்மா என்று சிவலிங்கத்தை கூறுவர்.

ஒவ்வொரு குருவும் ஒவ்வொரு விதமாக சிவலிங்கத்தின் அர்த்தம் கூறுவார்கள். நாம் வாசியோகத்தின் மூலமாக விந்துவை சக்கரங்களின் வழியாக சுழிமுனைக்கு ஏற்றி அது நாசி துவாரம் வழியாக உள்நாக்கில் இறங்கும். இந்த இறங்கும் திரவமே ரசமணி ஆகும். எப்படி ஆவுடயார் பாகத்தில் லிங்கபாகத்தை மருந்த சாத்தி இணைத்து பின்பு சிவபெருமானாக பார்க்கிறோமோ, அதை போலவே இந்த திரவமானது உள்நாக்கின் வலியாக இறங்கி பெருநாக்குடன் இணைகிறது. அப்போது நாம் சிவனாகவே மாறுகிறோம். இதுவே வாசியோகத்தின் இறுதிகட்டம்.

எப்படி சிவலிங்கம் மூன்று பாகமாக பிரிக்கப்படுகிறதோ அதாவது மேல் பக்கம் சிவன், நடுபக்கம் விஷ்ணு, அடிப்பக்கம் பிரம்மா என்று சிவலிங்கத்தை கூறுவர். அதை போலவே நம்முடைய மூலாதாரம் பல உயிர்களை உண்டாக்கும் சக்தி உடையது அதனால் பிரம்மா என்றும், திருவேணி சங்கமம் என்று சொல்லப்படும் மார்புபகுதியில் நம் உடலை காக்கின்ற இதயம் இருப்பதால் நம்மை காக்கின்ற விஷ்ணு இருக்கும் இடமாக கருதுகிறோம்.

உடலின் முக்கியமான இடமான மூளை இருப்பதாலும், வாசியோகத்தின் முடிவிடம் என்பதாலும் முக்கன்னனான சிவபெருமனை தலை பாகத்திற்க்கு வைத்துள்ளோம். அதனால் தான் கபாலம் வலியாக உயிர் பிரிந்தால் முக்தி என்று புராணம் கூறுகிறது. நன்றாக பாருங்கள் நமது பெருநாக்கு ஆவுடையார் பாகம் போலவும், சிருநாக்கு லிங்கபாகம் போலவும் இருப்பதை காணலாம் .இதை என்று நாம் இணைக்கிறமோ அன்று நாம் சிவனாகவே மாறிவிடுவோம்.

ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாகிய இறைவன், உயிர்கள்( ஆன்மாக்கள் ) உய்வு பெற வேண்டும் என்பதற்காக மூன்று விதமான வடிவங்களை எடுத்துக்கொண்டு வந்து, நமக்கு அருள்செய்கின்றான்.

அவ்வடிவங்கள்,

அருவம் – சிவம் – அதிசூக்குமம் – கண்ணுக்கு புலனாகாது- >இது நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
உருவம் – மகேசுவரன் – தூலம் – கண்ணுக்குப் புலப்படும்-இது சகளத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
அருவுருவம் – சதாசிவன் – சூக்குமம் – வடிவம் இல்லை-இது சகள நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும்.

இதில் அருவம் – கண்ணுக்கு புலனாகாது, உருவம் – உமா மகேசுவரர், தட்சிணா மூர்த்தி, நடராசர் – போன்றவை.
இந்த உருவத் திருமேனிகள் அறுபத்து நான்கு(64) வகையாக உள்ளதாகஆகமங்கள் கூறுகின்றன, அதிலும் சிறப்பாக இருபத்தி ஐந்து(25)வடிவங்கள் – மகேசுவர மூர்த்தங்கள் என்றுசொல்லப்படுகின்றன.மூன்றாவதாக இருக்கக் கூடிய அருவுருவத் திருமேனியே – சிவலிங்கம் எனப்படும்.”இலிங்கம்” – என்பதற்கு குறி என்பது பொருள், ” குறி ” – என்றால் = ஒரு அடையாளம்ஆக காண முடியாத இறைவனை காணுவதற்கான அடையாளமேசிவலிங்கம் எனப்படும்.

Popular Post

Tips