நடிகைகளின் ஆடையை வைத்து யாரும் எடை போட முடியாது

paalivuddil pirapala nadikar naanae padaekar meethu ‘mee doo’  iyakkam moolam paaliyal pukaarai eluppi paraparappai kilappi thodanki vaiththaar thanusree thaththaa. ivar thodankiya puyal  inthiyaa muluvathum paraviyullathu. ellaa paththirikaikalilum ‘mee doo’ puyalae aakkiramiththu kondu irukkirathu.  innelaiyil paaliyal reethiyaaka paathikkappaddathu thodarpaaka anmaiyil pirapala naalithal onrukku  thanusree thaththaa paeddi aliththaar. avar thanathu paeddiyin poathu koorukaiyil. “naan chekchiyaaka irukkiraen, kavarchchiyaaka … Continue reading "nadikaikalin aadaiyai vaiththu yaarum edai poada mudiyaathu"
nadikaikalin aadaiyai vaiththu yaarum edai poada mudiyaathu

பாலிவுட்டில் பிரபல நடிகர் நானே படேகர் மீது ‘மீ டூ’  இயக்கம் மூலம் பாலியல் புகாரை எழுப்பி பரபரப்பை கிளப்பி தொடங்கி வைத்தார் தனுஸ்ரீ தத்தா. இவர் தொடங்கிய புயல்  இந்தியா முழுவதும் பரவியுள்ளது.

எல்லா பத்திரிகைகளிலும் ‘மீ டூ’ புயலே ஆக்கிரமித்து கொண்டு இருக்கிறது.  இந்நிலையில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டது தொடர்பாக அண்மையில் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு  தனுஸ்ரீ தத்தா பேட்டி அளித்தார். அவர் தனது பேட்டியின் போது கூறுகையில். “நான் செக்சியாக இருக்கிறேன், கவர்ச்சியாக நடிக்கிறேன் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அதற்காக, எனக்கு நடந்ததை அப்படியே விட்டுவிட முடியாது.

நம் நாட்டில் நிலவும் ஒரு மோசமான விஷயம், நாம் ஒரு நடிகர், நடிகையின் கதாபாத்திரத்தையும் அவரது நிஜ நடத்தையையும் பிரித்துப் பார்ப்பதில்லை. என்னைப் பற்றி என்னவெல்லாமோ கூறிவிட்டார்கள். நான் என்னை தற்காத்துக்கொள்ள முயலும்போது, அதிகப்பிரசங்கி என்கிறார்கள். அமைதியாக இருந்தாலோ, நடிகைகளை சினிமாவில் அணியும் ஆடைகளை வைத்து நம்மை முடிவு செய்கிறார்கள்” என்றார்

Popular Post

Tips