கலாச்சாரம்

inraiya maadarn (Modern) yukaththil naam payanekkum vaekam oliyai vida athikamaaka irukkirathu. kalaachchaaram (Culture), cheerkaedu poanra vaathap pirathivaathankal aankaankae nadanthaalum, naveena yukam nookki oadikkonduthaan irukkirathu vaalkkai.   kalaachchaaram cheeralinthu viddathu enru koorum oru chaarar munvaikkum vaathankal enna?   penkalin karpu penkalin adakkam aankalin olukkam   "ivai ellaam antha kaalaththil evvalavu chariyaaka irunthathu theriyumaa? ippoaluthu varum kanda … Continue reading "kalaachchaaram"
kalaachchaaram

இன்றைய மாடர்ன் (Modern) யுகத்தில் நாம் பயணிக்கும் வேகம் ஒளியை விட அதிகமாக இருக்கிறது. கலாச்சாரம் (Culture), சீர்கேடு போன்ற வாதப் பிரதிவாதங்கள் ஆங்காங்கே நடந்தாலும், நவீன யுகம் நோக்கி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது வாழ்க்கை.

 

கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்று கூறும் ஒரு சாரர் முன்வைக்கும் வாதங்கள் என்ன?

 

பெண்களின் கற்பு
பெண்களின் அடக்கம்
ஆண்களின் ஒழுக்கம்

 

"இவை எல்லாம் அந்த காலத்தில் எவ்வளவு சரியாக இருந்தது தெரியுமா? இப்பொழுது வரும் கண்ட தொலைக்காட்சி சேனல்களின் மூலமும், திரைப்படங்களின் மூலமும் வெளிநாட்டு கம்பெனிகளின் வரவும் இன்றைய இளைஞர்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்கிறது"

 

இதுதான் இவர்களின் வாதங்களின் அடிநாதமாக இருக்கிறது.

 

ஒரு பெண் அல்லது ஒரு ஆண் அல்லது ஒரு மானிடப் பிறவி.. யாராக இருந்தாலும் எந்தக்காலமாக இருந்தாலும் ஒழுக்கமும் வாழ்க்கை முறையும் கற்பு என்று நினைக்கப்படுவதும், ஆம், நினைக்கப்படுவதும் அவரவர் எண்ணங்களும், அவரவர் பார்வைகளும் அவரவர்கள் எடுத்துக் கொள்ளும் விதமுமே அன்றி, கட்டுப்படுத்துவதாலும் கலாச்சார வகுப்புகள் எடுப்பதாலும் ஒவ்வொருவரின் மனநிலையையும் மாற்றுவது போன்ற வாதங்கள் தேவையற்றது.

 

அந்த காலம் இந்த காலம் போன்ற எந்தக் காலத்திற்குள்ளும் இது போன்ற கலாச்சார, தனிமனித ஒழுக்கங்கள் அடங்காது.

 

அவரவரின் பார்வையே.. வழிகாட்டுதலின் மூலம் அதன் சதவீதத்தை சற்று கூட்டிக் குறைக்கலாமேயன்றி மாற்றி அமைக்க முடியாது.

 

இப்பொழுது சொல்லுங்கள்...... தனி மனித ஒழுக்கத்திற்கு அந்தக்காலம் இந்தக்காலம் எல்லாம் உண்டா???

Popular Post

Tips