திரைப்பட எழுத்தாளர் இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா

charkaar pada charchchaiyai thodarnthu thiraippada eluththaalar chankath thalaivar pathaviyilirunthu iyakkunar kae.paakyaraaj raajinaamaa cheythullaar. thennenthiya thiraippada eluththaalar chankath thalaivar pathaviyilirunthu iyakkunar kae.paakyaraaj raajinaamaa cheythullaar. ithuthodarpaaka avar veliyiddulla arikkaiyil kooriyiruppathaavathu, poaddi illaamal, anaiththu uruppinarkaloada aekoapiththa opputhaloada ennai namma chankaththukku thalaivaraa thaerntheduththeenka, naanum chanthoshamaa poaruppu aeraththukkiddu, mana chaadchiyoada naermaiyaa cheyal padrathaa uruthimoali aeththukkiddaen. ellaam nallapadiyaathaan poayiddirunthathu. thideernu charkaar … Continue reading "thiraippada eluththaalar iyakkunar kae.paakyaraaj raajinaamaa"
thiraippada eluththaalar iyakkunar kae.paakyaraaj raajinaamaa
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
போட்டி இல்லாமல், அனைத்து உறுப்பினர்களோட ஏகோபித்த ஒப்புதலோட என்னை நம்ம சங்கத்துக்கு தலைவரா தேர்ந்தெடுத்தீங்க, நானும் சந்தோஷமா பொறுப்பு ஏறத்துக்கிட்டு, மன சாட்சியோட நேர்மையா செயல் பட்றதா உறுதிமொழி ஏத்துக்கிட்டேன். எல்லாம் நல்லபடியாதான் போயிட்டிருந்தது.
திடீர்னு சர்கார் பட சம்பந்தமாக சங்கத்துக்கு ஒரு புகார் வந்தது. அந்த புகாரை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்கிட்ட உண்மை இருப்பதா தெரிஞ்சதாலே, அவருக்கு நியாயம் வழங்க, பொறுப்பில் இருக்கற முக்கியமானவங்க எல்லாரையும் கலந்து ஆலோசிச்சு நடவடிக்கை எடுத்து, நல்லபடி நியாயமா அதை செயல்படுத்தவும் முடிஞ்சுது. ஆனா.. அதுல பல அசெளகரியங்கள் நான் சந்திக்க வேண்டி வந்தது. அதுக்கு முக்கிய காரணம்னு நான் நினைக்கிறது தேர்தல்ல நின்னு ஜெயிக்காம நான் நேரடியா தலைவர் பொறுப்புக்கு வந்ததுதான்னு நினைக்கிறேன்.
என்னை மாதிரியே போட்டி இல்லாம பதவிக்கு வந்த எல்லாருமே ராஜினாமா பண்ணிட்டு முறையா தேர்தல் நடத்தி, மறுபடியும் பொறுப்புக்கு வர்றதுதான். நான் யாரையும் நிர்பந்திக்கவில்லை.
தேர்தல் நடத்தினால் அதில் முறையா நின்னு, மெஜார்ட்டி ஓட்டோட ஜெயிச்சு பொறுப்பை ஏத்துக்கிட்டு, தொடர்ந்து கடமையோட செயல்பட்றேன். இப்படிக்கு, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்யும் கே.பாக்யராஜ்.
எனக்கு நேர்ந்த அசௌகர்யங்கள் என்ன?
ஒழுங்கினங்கள் என்னாங்கறதை, சங்க நலன் நற்பெயர் கருதி நான் வெளியிட விரும்பல.
அதோ், முருகதாஸிடம் நான் கெஞ்சியும் உடன் படாததாலே வேறு வழியே இல்லாம சன் பிக்சர்ஸ் போல ஒரு பெரிய நிறுவனத்தின், மிகப் பெரிய படமான சர்கார் படக் கதையை நான் வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருகிறேன்.

Popular Post

Tips