இந்த இடத்தில் மச்சம் இருந்தால் உங்களுக்கு லக்குத்தான்

iyarkaiyaakavae charumaththil thonruvathu thaan machcham. iththakaiya machcham udalil entha idaththil vaendumaanaalum aerpadalaam. ivvaaru udalil thonrum machchaththai athirshdam enru cholvaarkal. maelum machchaththaip parri pala nampikkaikal makkal manathil ullana. athumaddumallaamal, jothidaththil machchaththai vaiththum oruvarin vaalkkaiyaip parriyum, eppaerpaddavarkal enrum cholvaarkal. nerriyin valathu pakkaththil irunthaal… valathu pakka nerriyil machcham irunthaal, eppoathum chelva valaththudan iruppaarkal enru arththam. nerriyin idathu pakkaththil … Continue reading "intha idaththil machcham irunthaal unkalukku lakkuththaan"
intha idaththil machcham irunthaal unkalukku lakkuththaan

இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம்.

இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும் மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன.

அதுமட்டுமல்லாமல், ஜோதிடத்தில் மச்சத்தை வைத்தும் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியும், எப்பேர்பட்டவர்கள் என்றும் சொல்வார்கள்.

நெற்றியின் வலது பக்கத்தில் இருந்தால்…

வலது பக்க நெற்றியில் மச்சம் இருந்தால், எப்போதும் செல்வ வளத்துடன் இருப்பார்கள் என்று அர்த்தம்.

நெற்றியின் இடது பக்கத்தில் இருந்தால்…

வலது பக்கத்திற்கு அப்படியே எதிராக, மச்சமானது இடது பக்கத்தில் இருப்பவர்கள் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.

நெற்றியின் நடுவே இருந்தால்…
நெற்றியின் நடுவில் இருந்தால், செல்வத்துடன், நல்ல புகழ் மிக்கவராக இருப்போம்.
வலது கண்ணுக்கு மேலே இருந்தால்…

வலது கண்ணுக்கு மேலே மச்சம் இருந்தால், வாழ்க்கை துணையிடம் இருந்து அதிகப்படியான அன்பை பெறுவார்கள்.

இடது கண்ணுக்கு மேலே இருந்தால்…

மச்சமானது இடது கண்ணுக்கு மேலே இருந்தால், எதுவும் எளிதில் கிடைக்காது, போராடி தான் பெறுவார்கள்.

உதடுகளில் மச்சம் இருந்தால்…

உதடுகளில் மச்சம் இருந்தால், செக்ஸ் விஷயத்தில் வல்லவராக இருப்பார்கள் என்று அர்த்தம்.

மச்சம் உள்ளங்கையில் இருந்தால்…

வலது உள்ளங்கையில் மச்சம் இருப்பவர்களுக்கு, கையில் பணம் வந்து கொண்டே இருக்கும். அதுவே இடது உள்ளங்கையில் இருந்தால், அதிகப்படியான செலவை செய்வார்கள்.

கால்களில் இருந்தால்…

கால்களில் மச்சம் இருந்தால், நிறைய பயணங்களை மேற்கொள்வார்கள்.

புருவங்களுக்கு இடையே இருந்தால்…

புருவங்களுக்கு இடையே மச்சம் இருந்தால், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.

முதுகில் மச்சம் இருந்தால்…

முதுகு பகுயில் மச்சம் இருப்பவர்கள், மற்றவர்களை சார்ந்து வாழ்வார்கள் மற்றும் மக்கள் உங்கள் பின்புறத்தில் கெட்டவிதமாக பேசுவார்கள்.

Popular Post

Tips