ஆன்மிக சிந்தனைகள்

ovvooru manetha ithayaththin ullum mika aalaththil aathi anthamillaatha iraivan olinthu kondiruk kinraan. avanai unarntha vanae unmaiyai unarnthavan aavaan.   thannudaiya palaveenankal, kurrankal, paavankal ellaa varraiyum vaeroruvarin mael chumaththuvathu manetha iyalpaaka irukkirathu. nammudaiya thavarukalai unara maruppathu thaan itharkuk kaaranam.   eththanai nalla noolkalai vaachiththaalum nammaal thooyavaraaka mudiyaathu. unmaiyai naam unara vaendumaanaal, theeviramaakach chinthikka vaendum. appoathu meyyunarvu … Continue reading "aanmika chinthanaikal"
aanmika chinthanaikal

ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளும் மிக ஆழத்தில் ஆதி அந்தமில்லாத இறைவன் ஒளிந்து கொண்டிருக் கின்றான். அவனை உணர்ந்த வனே உண்மையை உணர்ந்தவன் ஆவான்.

 

தன்னுடைய பலவீனங்கள், குற்றங்கள், பாவங்கள் எல்லா வற்றையும் வேறொருவரின் மேல் சுமத்துவது மனித இயல்பாக இருக்கிறது. நம்முடைய தவறுகளை உணர மறுப்பது தான் இதற்குக் காரணம்.

 

எத்தனை நல்ல நூல்களை வாசித்தாலும் நம்மால் தூயவராக முடியாது. உண்மையை நாம் உணர வேண்டுமானால், தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அப்போது மெய்யுணர்வு நம்முள் மலரத் தொடங்கும்.

 

உங்களுக்குப் பிடித்ததை கடைபிடிப்பதுபோல, மற்றவர்களும் அவரவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும் சுதந்திரத்தைக் கொடுங்கள். ஏனென்றால், சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை.

 

எந்த விஷயத்தையும் நன்கு ஆய்ந்து பாருங்கள். கொண்ட கொள்கை மற்றும் குறிக்கோளில் மனவுறுதியுடன் இருங்கள்.

Popular Post

Tips