விஜய், ஏ.ஆர். ரஹ்மான் படங்களில்தொடர்ந்து இணையும் விவேக்

chilavarudankalukku munpu mathan kaarkki periya padankalil thodarnthu paadalkal eluthi athikak kavanam eerththaar. athaepoala paadalaachiriyar vivaek, tharpoathu periya nadikarkal, periya ichaiyamaippaalarkalin padankalil thodarchchiyaakap paadalkal eluthivarukiraar.  adli iyakkaththil vijay nadippil uruvaana merchal padaththil anaiththu paadalkalaiyum eluthinaar vivaek. athil, aalappoaraan thamilan paadal periya alavil verri perrathu. ithu vivaekkin thirai vaalkkaikkup periya thiruppumunaiyaaka maarividdathu. ithaiyaduththu rahmaan virumpum paadalaachiriyaraaka valarchchi … Continue reading "vijay, ae.aar. rahmaan padankalilthodarnthu inaiyum vivaek"
vijay, ae.aar. rahmaan padankalilthodarnthu inaiyum vivaek

சிலவருடங்களுக்கு முன்பு மதன் கார்க்கி பெரிய படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதி அதிகக் கவனம் ஈர்த்தார். அதேபோல பாடலாசிரியர் விவேக், தற்போது பெரிய நடிகர்கள், பெரிய இசையமைப்பாளர்களின் படங்களில் தொடர்ச்சியாகப் பாடல்கள் எழுதிவருகிறார்.

 அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதினார் விவேக். அதில், ஆளப்போறான் தமிழன் பாடல் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இது விவேக்கின் திரை வாழ்க்கைக்குப் பெரிய திருப்புமுனையாக மாறிவிட்டது. இதையடுத்து ரஹ்மான் விரும்பும் பாடலாசிரியராக வளர்ச்சி பெற்றுள்ளார் விவேக்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் நடித்த சர்கார் படத்திலும் அனைத்து பாடல்களையும் எழுதினார் விவேக். சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகிவரும் படத்திலும் பாடல்களை எழுதியுள்ளார் விவேக். தற்போது, மெர்சல் படத்துக்குப் பிறகு அட்லி – விஜய் இணையும் படத்துக்கும் அனைத்து பாடல்களையும் எழுதவுள்ளார். இந்தப் படத்துக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசை என்பதால் ரஹ்மானின் ஆஸ்தான பாடலாசிரியராக விவேக் மாறியுள்ளார். இளமையான வார்த்தைகள் மட்டுமல்லாமல் ஆங்கில வார்த்தைகள் கலந்து எழுதுவதிலும் சிறப்பாகச் செயல்படுவதால் விவேக்கை ரஹ்மான் தொடர்ந்து தேர்வு செய்கிறார் என்று அறியமுடிகிறது.

இதுதவிர ரஜினி நடிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் பேட்ட படத்திலும் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார். மெர்சர், சர்கார், விஜய்63 என அடுத்தடுத்து மூன்று விஜய் படங்களின் அனைத்துப் பாடல்கள் எழுதுவது அவருடைய மிகப்பெரிய வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. விவேக் பாடல்கள் எழுதும் பெரும்பாலான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவதும் அவருக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இதனால் இன்றைய தேதியில் தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடலாசிரியர் என்றால் அவர் விவேக்தான்.

மேலும் ட்விட்டரிலும் அவர் தொடர்ந்து இயங்கி வருகிறார். ரசிகர்களின் கேள்விகளுக்குப் பெரும்பாலும் பதில்கள் அளிப்பதால் அவரைப் பலரும் பின்தொடர்கிறார்கள். முக்கியமாக விஜய் படங்களுக்குத் தொடர்ந்து பாடல்கள் எழுதுவதால் விஜய் ரசிகர்கள் அவரை அதிகமாகப் பின்தொடர்கிறார்கள்.

விஜய் – அட்லி படத்தில் விவேக் மீண்டும் பாடல்கள் எழுதுவது குறித்து அட்லியும் விவேக்கும் ட்விட்டரில் பரஸ்பரம் நன்றி தெரிவித்தும் பாராட்டியும் பகிர்ந்துகொண்ட ட்வீட்கள்.

Popular Post

Tips