2.0 படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாட்டாள் நாகராஜ் கைது

nadikar rajinekaanth nadiththa 2.0 thiraippadaththai karnaadakaththil thiraiyida ethirpputh theriviththu poaraaddaththil eedupadda ,kannada chaluvalik kadchiyin thalaivar vaaddaal naakaraaj ullidda avarathu aatharavaalarkalai poaleesar kaithu cheythanar. penkalooru oorvachi thiraiyaranku ullidda palvaeru thiraiyarankalil viyaalakkilamaiyanru nadikar rajinekaanth nadiththa 2.0 thiraippadam thiraiyidappaddathu. penkalooril athika thiraiyarankukalil intha thiraippadam thiraiyiddathai ethirththu kannada chaluvalik kadchiyin thalaivar vaaddaal naakaraaj, viyaalakkilamai oorvachi thiraiyarankam mun thanathu aatharavaalarkaludan … Continue reading "2.0 padaththukku ethirppu therivikkum vaaddaal naakaraaj kaithu"
2.0 padaththukku ethirppu therivikkum vaaddaal naakaraaj kaithu

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ,கன்னட சலுவளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூரு ஊர்வசி திரையரங்கு உள்ளிட்ட பல்வேறு திரையரங்களில் வியாழக்கிழமையன்று நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் திரையிடப்பட்டது. பெங்களூரில் அதிக திரையரங்குகளில் இந்த திரைப்படம் திரையிட்டதை எதிர்த்து கன்னட சலுவளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், வியாழக்கிழமை ஊர்வசி திரையரங்கம் முன் தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவர் பேசியது: தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், தெலங்கானா உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் கன்னட திரைப்படங்கள் திரையிடப்படுவதில்லை. ஆனால், கர்நாடகத்தில் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதனால், கன்னட மொழி திரைப்படங்கள் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் ஒரே நாளில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் 950 காட்சிகள் திரையிடப்படுகின்றன. சென்னையில் 500 காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகின்றன.

கன்னட திரைப்படத் துறையை நம்பியுள்ள கலைஞர்கள், இயக்குநர்கள், தொழிலாளர்கள் நிலைமை நசியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, தமிழ் உள்ளிட்ட வேற்றுமொழி திரைப்படங்களை அதிக திரையரங்குகளில் திரையிடுவதைத் தடுக்க வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

Popular Post

Tips