100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ரஜனியின் 2.0

rajine – shankar kooddaneyil uruvaakiyulla 2.O padaththai laikaa neruvanam thayaariththullathu. rajinekku inaiyaana kathaapaaththiraththil paalivud nadikar ak‌shay kumaar nadiththullaar. kathaanaayaki – aemi jakchan. ae.aar. rahmaan ichai amaiththullaar. 3di tholilnudpaththil 2.0 padam uruvaakiyullathu.  inthap padam ulakalavil roo. 400 koadikkum athikamaaka vachooliththullathu. iththakavalai laikaa neruvanam athikaarapoorvamaaka ariviththullathu. ithu pilaakpasdar maddumalla, mekaa pilaakpasdar enru perumithamaaka dveed veliyiddullathu. ithanaal thamilil athikam vachooliththa … Continue reading "100 koadikkum athikamaaka vachooliththu rajaneyin 2.0"
100 koadikkum athikamaaka vachooliththu rajaneyin 2.0

ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி – ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகியுள்ளது.

 இந்தப் படம் உலகளவில் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இத்தகவலை லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது பிளாக்பஸ்டர் மட்டுமல்ல, மெகா பிளாக்பஸ்டர் என்று பெருமிதமாக ட்வீட் வெளியிட்டுள்ளது. இதனால் தமிழில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமை 2.0 படத்துக்குக் கிடைத்துள்ளது.

இந்நிலையில் 2.0 படம் நேற்றுடன் ஹிந்திப் பதிப்பில் ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளது. 5 நாள்களில் இந்த இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது.  திங்கள் அன்று 2.0 படத்தின் ஹிந்திப் பதிப்பு ரூ. 13.75 கோடி வசூலை அடைந்துள்ளது. இதன் மூலம் 2.0 படத்துக்கு ஹிந்தியில் மட்டும் ரூ. 111 கோடி வசூல் கிடைத்துள்ளது (இந்தியாவில்). இயக்குநர் கரன் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் 2.0 படத்தை ஹிந்தியில் வெளியிட்டுள்ளது.

2.0 ஹிந்திப் பதிப்பு நிகழ்த்தியுள்ள சாதனைகள்

2.0 ஹிந்திப் பதிப்பு 5 நாள்களில் ரூ. 111 கோடி வசூலை இந்தியாவில் அடைந்துள்ளது.ஹிந்தியில் ரஜினி படமொன்று ரூ. 100 கோடியை அள்ளுவது இதுவே முதல்முறை. தமிழ்ப் படமொன்று ஹிந்தியில் டப் செய்யப்பட்டு ரூ. 100 கோடி இலக்கை அடைந்துள்ளதும் இதுவே முதல்முறை.

ஹிந்திப் படங்களில் 2018-ல் ரூ. 100 கோடி வசூலை அடையும் 12-வது படம் 2.0. ஹிந்திப் படங்களில் டிக்கெட் கட்டணங்கள் முதல் வார இறுதியில் அதிகமாகவே இருக்கும். ஆனால், 2.0 படம் அதிக விலைக்கு விற்கபடாமலேயே இந்தச் சாதனையை 5 நாள்களில் அடைந்துள்ளது.
அக்‌ஷய் குமார் நடித்த படங்களில் குறைந்த நாள்களில் ரூ. 100 கோடியை எட்டியது 2.0 மட்டும்தான். மேலும் அக்‌ஷய் குமாரின் 10-வது ரூ. 100 கோடி வசூல் கண்ட படம் இது.

அக்‌ஷய் குமார் நடித்த படங்களில் ஒரு நாளில் அதிக வசூல் கண்ட படம் – 2.0. இதற்கு முன்பு கோல்ட் படம் அதன் முதல் நாளில் ரூ. 25.50 கோடி வசூலை அடைந்தது. ஆனால் 2.0 படம் ஞாயிறன்று ரூ. 34 கோடியை அள்ளி அக்‌ஷய் குமாருக்கும் பெருமை சேர்த்துள்ளது.

Popular Post

Tips